மேரி ஆலிவர்/கற்களால் உணர முடியுமா?

தமிழில் : க.மோகனரங்கன்


அவை தம் வாழ்க்கையை நேசிக்கின்றனவா?
அல்லது
அவற்றின் பொறுமை மற்ற அனைத்தையும் மூழ்கடிக்கிறதா? நான் கடற்கரையில் நடக்கும்போது
வெள்ளை, கருப்பு என
பல வண்ணங்கள் கொண்ட கற்கள்
சிலவற்றை சேகரிக்கிறேன் .
அவற்றிடம்
நான் சொல்கிறேன்
கவலைப்படாதீர்கள்,
மீண்டும் உங்களை
இங்கே அழைத்து வருவேன்,
நான் அதை செய்கிறேன்.
மரம் வளரும் போது
கிளைகள் பலவற்றால்
அது மகிழ்ச்சி அடைகிறது , ஒவ்வொன்றும் கவிதை என்பதைப் போல?
தங்கள் மழைப் பொதிகளை அவிழ்ப்பதில்
மேகங்கள் மகிழ்ச்சி அடைகின்றனவா?
உலகில் பெரும்பாலானவர்கள் இல்லை, இல்லை,
அது சாத்தியமில்லை என்றுதான் கூறுகிறார்கள்.
அவ்வாறானதொரு முடிவுக்கு வருவதை நான் யோசிக்கவும் மாட்டேன்.
அது மிகவும் பயங்கரமானது.
தவறானதும் கூட.