லக்ஷ்மி ரமணன்/ யாதுமாகி நின்றவள்


அமெரிக்க விஸாவுக்கான விண்ணப்ப படிவத்தை நிரப்பிக்
கைஎழுத்துப்போட்டுக்கொடுக்கும்படி அப்பா சொன்னதும்
அம்மா அதைக்கையிலெடுத்துக்கொண்டு தயங்கியதும்
மகள் நந்தினி அவளை நெருங்கி”என்னாச்சும்மா?என்ன
யோசிக்கிறே,?”என்றாள்.
“ஒண்ணுமில்லை” என்றவள் படிவத்தை நிரப்ப ஆரம்பித்தாள்
அதில் மனுதாரர் செய்யும் தொழில் அல்லது வேலை என்கிற
குறியீட்டுக்கு நேரே அம்மா. ஹோம் மேக்கர் ஒன்லி என்று
நிரப்பினதைப்பார்த்ததும் நந்தினிக்கு லேசான கோபம்
வந்தது.
“அதென்ன ஒன்லி?” என்று கேட்டவண்ணம் அம்மாவின்
முகத்தைப்பார்த்தாள்.
“வேறு எதற்கும் லாயக்கற்றவள்னு அர்த்தம்” அம்மாவின்
முகத்தில் படர்ந்த சோகத்தை அவளால் நன்றாகவே பார்க்க
முடிந்தது.
“வாட் டூ யூ மீன்?”
“வேறு என்ன எழுதமுடியும்? உன்அத்தை மாதிரியோ இல்லை
சித்தியைப்போலவோ நான் வேலைக்குப்போய் சம்பாதிப்ப
தில்லையே.”
“ஓ அதுதான் விஷயமா? வீட்டில் நீ என்ன செய்யறே? படுத்து
தூங்கிக்கிட்டே இருக்கியா? இல்லையே”
அதெல்லாம் வேலையாகாது.,”
அம்மா கண்களை மறைத்த கண்ணீரை அவசரமாகத்துடைத்து
க்கொண்டு எழுந்தாள்.
“ஏன் அப்படிச்சொல்லரே?”
” வீட்டுலே பண்ணுகிற வேலைக்கெல்லாம் மரியாதையே
கிடையாது”
தான் ஒரு பட்டதாரியாக இருந்தும் வேலைக்குப்போகாதது
அம்மாவுக்கு ஒரு பெரிய குறை என்பது நந்தினிக்குத்தெரியும்.
தன் திருமணத்திற்கு முன் பட்டப்படிப்பை முடித்து, ஆசிரியருக்
கான பயிற்சியையும் முடித்துக்கொண்டபின் சில மாதங்கள்
பள்ளி ஆசிரியையாக வேலையும் பார்த்தாள்.
திருமணம் நிச்சயமாவதற்கு முன்பு அவள் தாய் வசுமதியுடன்
பேசிய அப்பா மாதவன் தன் மருமகள் வேலைக்குப் போவதில்
தன் அம்மாவுக்கு விருப்பமில்லை என்பதால் தானும் அதை
விரும்பவில்லை. என்பதைத்தெளிவாகச் சொல்லி விட்டாராம்
அதற்கான காரணமும் இருந்தது.
மாதவன்தான் அவர்கள் குடும்பத்தில் மூத்த மகன்.தந்தை
சில ஆண்டுகளுக்குமுன் காலமாகிவிட்டார்
திருமணமாகாத தங்கை வனிதாவுக்கும்,கல்லூரி மாணவனாக
இருந்த தம்பிவாசுவுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக்
கொடுக்கிற பொறுப்பு தன்னுடயதாகிவிட்டதாலும்,
தான் பார்த்த அரசு வேலையில் அடிக்கடி இடமாற்றம் இருக்க
வாய்ப்பிருப்பதால் தன் மனைவி வேலை பார்த்தால் அதனால்
பிரச்சினைகள் வர வாய்ப்பிருப்பதாலும் தான் அப்படி ஒரு
முடிவை எடுத்திருப்பதாகவும் விளக்கம் கொடுத்தாராம்.
அதற்குஅம்மா வசுமதி ஒப்புக்கொண்டு தான்பார்த்த
வேலையிலிருந்து விலகியபிறகே திருமணம் நடந்தது என்றும்
அம்மா சொல்லியிருக்கிறாள்.
ஆனால் திருமணத்திற்கு ப்பிறகு மாதவனது சித்தி அத்தை
போன்ற உறவினர்களாகட்டும்,நண்பர்களின் மனைவிகளா
கட்டும் கொஞ்சம் படித்தவர்களானாலும்திருமணமானபின்
குடும்பத்தலைவிகளாக இருந்தகொண்டு வெளிவேலைக்கும்
சென்று வந்தவர்களாக இருந்ததைப்பார்த்தபோது நன்றாக ப்
படித்திருந்தும் தன்னால் அது முடியாமல் போனதை நினைத்து
ஒரு தாழ்வு மனப்பான்மை அம்மாவிடம்பதிந்து போனதை
நந்தினியால் உணர்ந்து கொள்ளமுடிந்தது.
இதைப்பற்றி தன் கணவன் மாதவனிடம் பேசமுடியாத
சூழ்நிலை. இடமாற்றம், பதவிஉயர்வு, அலுவலகவேலைகள்
அவனை இறுக்கிப்பிடித்ததால் குடும்பத்தை பராமரிக்கிற
பொறுப்பு முழுவதையும்வசுமதி ஏற்றுக்கொள்ளவேண்டி
வந்தது.மாமியார், நாத்தனார், மைத்துனன் இவர்களுக்கு
உடம்பு சரியில்லாமல் போனால் மருத்துவமனைக்கு அழைத்து
ப்போவதிலிருந்து எல்லாவற்றையும் வசுமதி கவனித்துக்
கொண்டாள் அவளுக்கு மகள் நந்தினியும்,மகன் சூர்யாவும்
பிறந்தபிறகு பொறுப்புகள்இன்னும் அதிகமாயிற்று.
அடிக்கடி வந்துபோன உறவினர்கள்வேறு.வந்துஅவர்களுடன்
குறைந்தது ஒருவாரமாவது தங்கிவிட்டுப்போவார்கள்.
வசுதான் வேலைக்குப்போகிறதில்லையே. வீட்டிலேதானை
இருக்கா.அதனால் தங்கிட்டுப்போகலாம்னு வந்தோம் ” என்று
தாங்கள் வந்ததற்கான விளக்கம்வேறு.
வனிதாவின் படிப்பு முடிந்ததும் வரன் பார்த்து பெங்களூரில்
தனியார் நிறுவனமொன்றில் வேலைபார்த்த பாஸ்கரை
மணமுடித்துவைத்து அதன்பிறகு தலைதீபாவளி, வளைகாப்பு
சீமந்தம்,குழந்தை பிறந்த பிறகு புண்யார்ச்சனை, குழந்தைக்கு
தொட்டில்போட்டு ,சொந்தபந்தங்களை அழைத்து அதற்கு
பெயர்சூட்டி வந்தவர்களுக்கு விருந்து வைத்து என்று எந்த
சம்பிரதாயத்தயும் விடாமல் செய்து அதேமாதிரிவாசுவின்
திருமண சம்பிரதாயங்களையும் அமோகமாக நடத்தி …..
இப்படி மூத்த மருமகளாக தன் கடமைகளை விடாமல்
நிறைவேற்றியவள் தன் அம்மா என்று நந்தினி பெருமையாக
தன் சிநேகிதிகளிடம் சொல்லிக்கொள்ளுவாள்.
அதேமாதிரி ஒரு தாயாக தன்மகள் நந்தினிக்கும் மகன்
சூர்யாவிற்கும் படிப்பு முடிந்ததும் வேலைகிடைத்ததும்
திருமணத்தை நடத்தி வைத்து,சூர்யாவுக்கு அமெரிக்க
நகரம் சிகாகோவில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை
கிடைத்துப்போய் நான்கு ஆண்டுகளாகிவிட்டன.
நந்தினி யின் கணவன் சென்னையிலேயே மருத்துவமனை
ஒன்றில் டாக்டராக இருந்தான். அதுவசுமதிக்கு கிடைத்த
பக்கபலம் என்றே சொல்லலாம்.நந்தினியும் மருத்துவமனை
க்கு அவ்வப்போது சென்று சிறு உதவிகளைச்செய்யும்
பணியாளாக வேலைபார்த்தாள்.
அடுத்து நந்தினிக்கு மகன் பிறந்து,மாதவன் ரிடயராகி, அவன்
தாய் மாரடைப்பில் இறந்து போய் என்று அடுத்தடுத்து நடந்த
சம்பவங்கள் இத்தனையையும் தான் எப்படி சமாளித்தோம்
என்று வனிதா தனக்குள் யோசித்து பிரமித்தாலும் தான்
படித்திருந்தும் வேலைக்குப்போகாதது ஒரு குறையாக அவள்
மனதை வேதனைப்படுத்திய விஷயம்
வனிதா மிகவும் சுவையாக சமைப்பாள். வீட்டை அத்தனை
சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளுவாள்.
இத்தனைக்கும் நடுவில் அக்கம்பக்கத்திலிருந்த ஏழைக்
குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லிக் கொடுத்தாள்.
அக்கம்பக்கத்திலிருந்தவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை
சமாளிக்க வனிதா உதவத்தவறியதில்லை
தன் பெற்றோர்கள் சில மாதங்களாவது சிகாகோ வந்து
தங்களுடன் தங்க வேண்டும் என்று சூர்யா வற்புறுத்தியதால்
விஸாவுக்காக மனு எழுதிக்கொடுக்க வேண்டி வந்தது.
ஒருநாள் திடீரென்று நந்தினி “அம்மா எங்க அடுத்த வீட்டு
மாமியுடைய பையன் சித்து பரீட்சை சரியாக எழுதாமல்
பெயிலாகிவிட்டான். அவனுக்கு கொஞ்சம் பாடம் சொல்லிக்
கொடுக்க முடியுமா?”என்று கேட்டாள்.
“இதென்ன கேள்வி நான் என்ன வேலைக்கா போகிறேன்.
வீட்டுலே உக்காந்து பொழுதைக்கழிச்சுக்கிட்டிருக்கேன்.
கண்டிப்பா அந்தப்பையனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கி
றேன்”அம்மா பதில் சொன்னதும் நந்தினி “ஸ்டாப் இட்”எனறு
கோபத்துடன் கத்தினாள்.
“என்னாச்சு நந்தினி ஏன் கோபப்படறே?”
“ப்ளீஸ் அம்மா இனிமேல் நீ அப்படி பேசக்கூடாது. நீ வேலை
பார்க்காட்டி என்ன? என்னைப்பொறுத்தவரை நீ அம்மா
மட்டுமில்லை. உறவுகளின் சங்கமம். பாசத்தோடு ஒரு
குடும்பத்தை அரவணைத்து,அவர்களது முன்னேற்றத்திற்கு
உறுதுணையாக இருந்து, என் சகோதரன் படித்து அமெரிக்கா
போகிற அளவுக்கு சாதித்து, எனக்கும் அவனுக்கும் அன்பும்
பாசமும் நிறைந்த வாழ்க்கைத்துணையைத்தேடிப்பிடித்து
சேர்த்துவைத்து, நட்பு வட்டாரத்தில் யாருக்கு. பிரச்சினை
என்றாலும் உதவி அதைத்தீர்த்து வைத்து, ஏழைக்குழந்தை
களுக்கு இலவசமாக பாடம் சொல்லிக் கொடுத்து அவர்களிடம்
தன்னம்பிக்கையை வளர்த்து இதைவிட பெரிய வேலையை
செய்யமுடியுமா? இத்தனையையும் எந்தவித விளம்ரமும்
இல்லாமல் செய்து கொண்டிருக்கும் உன்னை நான்
யாதுமாகி நிற்கின்ற அம்மா என்று கூப்பிடலாமா?”அப்போது
அங்கு தற்செயலாக வந்துநின்று…
“சூப்பர்”என்று கைத்தட்டியமாதவன் “இதைவிட பெரிய விருது
உனக்கு என்னவேணும் வனிதா?”என்று அருகில் வந்து தன்
கையைக்குலுக்கியதும் அவள் சிலிர்த்து நின்றாள்.

                                                         x
                                                         x

One Comment on “லக்ஷ்மி ரமணன்/ யாதுமாகி நின்றவள்”

Comments are closed.