சுரேஷ் ராஜகோபால் கவிதைகள்

வானம் பார்த்த பூமி

எங்க பூமி
முப்போகம் விளைந்த
காலம் ஒன்றுண்டு
இப்போ தண்ணிக்கே பஞ்சம்
ஏரியும் காஞ்சு
கிணறும் வறண்டு
மழையும் பொய்த்து போச்சு
இது
வானம் பார்த்த பூமி
தினமும்
வானத்தை மட்டுமே பார்க்கிறோம்
மழைத்துளி கூட காணோம்
கண்ணிரண்டில் நீர்த்துளி
மட்டுமே நிக்குது.
கோடங்கி குறி சொன்னான்
கொடுக்கற தெய்வம் கூரையை
பிச்சுக் கொடுக்குமாம்
கூரை பிஞ்சு போச்சு
முன்னது நடந்தது
பின்னது எப்போது….?
[16/02, 21:27] R V Suresh College: இரண்டாவதாக படித்த கவிதை
சுரேஷ் ராஜகோபால்
16 02 2024

கோடை மழைச்சாரல்


ஒரு கோடைகால
மாலைவேளை
பலமாக காற்றுத்தான்
வீச … வீச…. வீச
திடுமென சாரல் அடிக்கலாச்சு
சாய்வான சாரலில்
காற்றின் வேகத்தில்
ஒருவித நடனம் தெரிந்தது
எங்கோ தவளைகள்
குரலேடுத்தன
நாயும் மாடும் மறைவை
தேடியோடின
பல குடைகள் பூக்களாக
விரிந்தன
தெருவினில் வேகம்
வேகமாக …
மண்வாசனை எங்கும்
வெளிப்பட
இயல்பு வாழ்வு
நிலை தடுமாற…
வீதியெங்கும் நீரோட்டம்
அங்கும் இங்கும் நீரலைகள்
வெப்பம் தணிந்து
நிம்மதி பெருமூச்சு