லக்ஷ்மி ரமணன்

மனமே மருந்தாகும்.

.

புதிதாகத்தாங்கள் குடிவந்திருந்த முதல் மாடி வீட்டு சமையலறை ஜன்னலருகில் நின்று சுமதி பார்த்தபோது அடுத்த வீட்டில் நின்ற நீலநிற காரை கச்சிதமாக தண்ணீர் போட்டுத்துடைத்து நீரை வீணாக்காமல் எடுத்துச்சென்று செடிக்கு ஊற்றிவிட்டு வீட்டுக்கு உள்ளே சென்றமுதியவரை அவள் வியப்புடன் பார்த்தாள். இன்னொருநாள் அந்தவீட்டு வரவேற்பறையை தூசிதட்டி அவர்
துடைத்ததும். சமையலறை அலமாரியில்
சாமான்களை அடுக்கி வைத்ததும் அவளை ஈர்த்த விஷயங்கள்.
தன் கணவன் விசுவிடம் தான் பார்த்ததை
சொல்லி அடுத்த வீட்டு வேலைக்காரனை
அழைத்து தங்கள் வீட்டிலும்வேலைக்கு கூப்பிட அனுமதி கேட்டாள் அவனும் உடனே சம்மதிக்க, அது விஷயமாக அடுத்த வீட்டு மாமியுடன் பேச சுமதி கிளம்பிப்போனாள்.
வரவேற்பறையில் நாற்காலியில் சாய்ந்து
அமர்ந்து அன்றைய தினசரியில் ஆழ்ந்து
போயிருந்த முதியவரைக்கண்டதும் அவள்
திகைத்துப்போனாள்.
தன் கணவர் என்று மாமி அவரை அறிமுகப்படுத்தியதும் அதிர்ந்து போனாள்.
“உட்கார்ந்து பேசலாமே அடுத்த வீட்டு முதல் மாடிக்கு குடிவந்திருக்கிற விசுவின் மனைவியா?”
ஆமாம் இந்த வயசில் அங்கிள் தன்னை வீட்டு வேலையில் ஈடுபடுத்திக்கொண்டுசெய்வதை
ரொம்ப பாராட்டணும்னு தோணித்து அதான் வந்தேன்”
“அதுக்காகவா வந்தே? ரொம்பதேங்க்ஸ்மா.
வயசாயிடுத்தேன்னு சோர்ந்து போகாமல்
மனசை எதிலாவது ஈடுபடுத்தி வெச்சுண்டால்
அதன்தாக்கம் உடம்புக்கோ மனசுக்கோ ஏற்படாமல் சமாளிச்சு சுறுசுறுப்பாக இருக்கும் அதனால் என்னை பிசியாக வெச்சுக்கறேன்”
என்று பெரியவர் சொன்னதும் சுமதி நெகிழ்ந்து போனாள்.