விஜயலக்ஷ்மி கண்ணன்/இப்படியும்


வேகாத வெய்யில்.
தை மாதம் முடிந்து மாசி பிறந்து விட்டது.
காலை எட்டு மணி வரையிலும் எதிரில் உருவம் தெரியாத அளவிற்கு பனி மூடி கிடக்கு.
பிறகு நாள் முழுதும் வெய்யில் தான் கொளுத்துகிறது.

ரமேஷ் அவசர அவசரமாக தன் பைக்கை எடுத்தான். ஏறி அமர்ந்து கொண்டு விரைந்தான்.
அப்பவே கிளம்பி இருக்கணும், லேட் ஆகும் போல் தெரிகிறது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு பைக்கை உதைத்தான்.
மள மள என்று வேலையை கவனித்து மீண்டும் தெருவில் இறங்கி வண்டியைக் கிளப்பினான்.
அரை மணி நேரத்தில் போய் சேர்ந்து விடலாம்
அக்கா ரொம்ப சந்தோஷம் அடைவாள் என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.

கொஞ்ச தூரத்தில்
ஒரு வயதான மூதாட்டி எதிரே நடந்து வந்து கொண்டிருந்தாள்.

மஞ்சள் நிற நூல் சேலை உடுத்தி வெள்ளை நிற ரவிக்கை அணிந்திருந்தாள்.
சேலையும் வெளுத்து கிட்ட தட்ட ரவிக்கை நிறம் வந்துவிட்டது.
தலை கோடாலி முடிச்சு. முகம்
வெய்யலில் நடந்து வியர்த்து சோர்ந்து போய் இருந்தது.
இரு கைகளிலும்
பெரிய சுமை பையோடு தளர்ந்து தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அங்கங்கு நின்று ஆசுவாசப் படுத்தி கொண்டு மீண்டும் நடந்த வண்ணம்.

ரமேஷ் அருகில் சென்று வண்டியை நிறுத்தி “அம்மா, எங்கே போறீங்க?
என் வண்டியில் பின்னாடி உட்காருவீங்களா, உங்களை எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்க, கூட்டிப் போய். இறக்கி விடுகிறேன்.”
என்று சொன்னபடியே தன் பையில் இருந்து தண்ணீர் புட்டியை எடுத்துக்
கொடுத்து “தண்ணி குடிங்க அம்மா, வேகாத வெய்யில் “என்று இதமாக பேசினான்.
முருகம்மா, “தம்பி நல்லா இரு”. என்று பாதி புட்டி தண்ணீர் குடித்ததும் முகம் மலர்ந்து.

“கையில் என்னம்மா”?

“பக்கத்து வீட்டு
தோட்டத்துக் காய் தம்பி.
இந்த பையில் வாழைப் பழம் “என்றாள்.
“விற்கவா?”ரமேஷ் கேட்டான்.
“ஆமா தம்பி.”

“ஒரு நிமிடம் ,இங்கே அந்த படியில் உட்காருங்க. நான் உடன் வருகிறேன்.”
கை கூப்பி உட்கார்ந்தாள் முருகம்மா.

“இந்தாங்க அம்மா,”
குரல் கேட்டு திரும்பினாள்.
“உங்கப் பை வெண்டைக் காயும் அந்த வாழை பழங்களையும் எனக்கு கொடுங்க.
நான் வாங்கிக் கொள்கிறேன்.
எவ்வளவு அம்மா?”
ரமேஷ் தன் பையில் இருந்து ஒரு பலகார பையும், நூறு ரூபாய் தாள் இரண்டு எடுத்து முருகம்மா கையில் கொடுத்து காலைத் தொட்டு வணங்கினான்.
“இந்தாங்க, இதை பாருங்க பிடிதிருக்கா அம்மா?”
முருகம்மாவுக்கு ஒன்றும் புரிய இல்லை .

“இன்னிக்கு
ஆண்டவன் என் மேல் தயவு கூர்ந்து இருக்கிறான்.”
மனதில் நினைத்துக் கொண்டு கையில் வாங்கி பார்த்த வுடன் அவளுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை.
அழகானப் பச்சை நிற ஜரிகைக் கரை போட்ட உயர் ரக நூல்
சேலை. அரக்கு நிற ரவிக்கைத் துண்டு.
ரமேஷை மனமார ஆசீர்வதித்து கண்ணீர் மல்க சொன்னாள்,”தம்பி, நீ யார் பெற்ற மகனோ.. உன் நல்ல மனதிற்கு நான் என்ன கைமாறு செய்ய?
நீ என்றும் நல்லா இருக்கணும்.
நல்லா இருக்கணும் ‘என்று பல தடவை சொல்லிக் கொண்டே இருந்தாள்.
“அம்மா,என்னை உங்கள் மகன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அழாதீங்க அம்மா.
கவனமாக போய் வாங்க. தண்ணீர் புட்டியை ,”இதை வெச்சுக்குங்க”. என்று கையில் திணித்தான் ரமேஷ்.
முருகம்மா மீண்டும் நடக்கலானாள்.
இப்பொழுது தன் கூரை வீட்டை நோக்கி.

ரமேஷ் தன் சகோதரியின் பிறந்த நாளுக்குப்
பரிசாக வெண்டைக்காயும்
வாழைப்பழமும் கையில் கொடுத்து வணங்கினான்.