ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் இரண்டாம் பகுதி

நடிகருக்கு அறிவுரை தொடர்ச்சி

ஸ்ரீராமகிருஷ்ணர் :’இதோ பார்,சாதுக்களின் படங்களை வீட்டில் மாட்ட வேண்டும். அப்போது தெய்வ சிந்தனைகள் மனத்தில் எழும்.’

வந்தோபாத்யாயர்: ‘உங்கள் படத்தை வீட்டில் வைத்திருக்கிறேன். கையில் ஹுக்காவுடன் மலையில் வசிக்கும் ஒரு சாதுவின் படமும் இருக்கிறது.’

ஸ்ரீராமகிருஷ்ணர்: ‘ஆம். சாதுக்களின் படத்தைப் பார்த்தால் மனத்தில் விழிப்பு ஏற்படுகிறது. சீதாப்பழ பொம்மையைப் பார்க்கும்போது உண்மையான சீதாப்பழம் ஞாபகம் வருகிறது அல்லவா, இளம்பெண்ணைப் பார்க்கும்போது இன்ப எண்ணங்கள் எழுகின்றன அல்லவா, அதுபோல். அதனால்தான் எப்போதும் சாதுசங்கம் வேண்டும் என்று சொல்கிறேன்.

(வந்தோபாத்யாயரிடம்) ‘வாழ்க்கையின் துன்பங்களைப் பார்க்கிறாய் அல்லவா! போகத்திற்கு முயன்றால் துன்பமே கிடைக்கிறது. பருந்தின் அலகில் மீன் இருந்ததுவரை காகங்கள் கூட்டம் கூட்டமாக அதைத் துன்புறுத்தின.

‘சாதுசங்கத்தினால் மன அமைதி கிடைக்கும். முதலை தண்ணீருக்கடியில் நீண்ட நேரம் இருக்கிறது; ஆனால் மூச்சு விடுவதற்காக அவ்வப்போது மேல்மட்டத்திற்கு வருகிறது,

ஓசையுடன் நெடுமூச்சு விடுகிறது.’

வித்யா:’சுவாமி, போகத்தைப்பற்றி நீங்கள் கூறியது உண்மை. இறைவனிடம் சுகபோக இன்பங்களை வேண்டினால் முடிவில் அழிவிற்குத்தான் ஆளாக நேரும். மனத்தில் எத்தனை விதமான ஆசைகள் எழுகின்றன! எல்லா ஆசைகளும் நமக்கு நன்மையை அளிப்பதில்லை. இறைவன் கல்பதரு, எதைக் கேட்டாலும் தருவார். ஆனால், “இறைவன் தான் கல்பதருவாயிற்றே! ஒரு புலி வருமா பார்ப்போம்” என்று நினைத்தால் புலி வந்து நிற்கும், நம்மை விழுங்கியும்விடும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் : ‘ஆம்! புலி வரும் என்பது நினைவில் இருக்க வேண்டும். இதற்கு மேலும் சொல்ல என்ன இருக்கிறது? மனத்தை இறைவனிடம் வைத்திரு, அவரை மறக்காதே, எளிய இயல்புடன் அவரை அழைத்தால் அவர் காட்சி தருவார்.

இன்னொரு விஷயம். நாடக முடிவில், சிறிது ஹரி நாமம் பாடி நிறைவு செய். அப்போதுதான் பாடுபவர்களும் கேட்பவர்களும் தெய்வ சிந்தனையுடன் வீடு திரும்புவார்கள். ‘

நாடகக் குழுவினர் குருதேவரை வணங்கி விடை பெற்றனர். இரண்டு பக்தர்களின் மனைவியர் குருதேவரை வந்து வணங்கினர். அவர்கள் குருதேவரை தரிசிப்பதற்காக உபவாசமிருந்து வந்திருந்தார்கள். இருவரும் இரண்டு சகோதரர்களின் மனைவியர், வயது 22,23 இருக்கும். இருவருக்கும் குழந்தைகள் இருந்தன, முக்காடிட்டிருந்தனர்.

ஸ்ரீராமகிருஷ்ணர் (அந்தப் பெண்களிடம்): ‘இதோ பாருங்கள், நீங்கள் சிவ பூஜை செய்யுங்கள். நித்யகர்மம் என்னும் நூல் உள்ளது. அதைப் பார்த்து,எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். பூஜை என்றால் இறைப் பணிகளில் நீண்ட நேரம் செலவிட முடி யும். பூப்பறிப்பது, சந்தனம் அரைப்பது, பூஜைப் பாத்திரங் களைத் துலக்குவது, நைவேத்தியம் தயாரிப்பது என்றெல்லாம் செய்யும்போது மனம் அந்த வழியில் போகும்; அற்பத்தனம், கோபம், வெறுப்பு முதலானவை மறைந்து விடும். நீங்கள் இருவரும் பேசும்போது இறைவனைப் பற்றியே பேசுங்கள்.

‘எப்படியாவது மனத்தை இறைவனிடம் வைக்க

வேண்டும். அதுதான் விஷயம். ஒருபோதும், ஒருமுறைகூட

அவரை மறக்கக் கூடாது. எண்ணெய் ஒழுக்குபோல் இடை விடாத இறை நினைவு வேண்டும். ஒரு செங்கல்லையோ கருங்கல்லையோகூட தெய்வமாகக் கருதி பக்தியுடன் பூஜித்தால், அவரது அருளால் அவற்றின்மூலமும் இறைக் காட்சி பெற முடியும்.

‘நான் முதலில் கூறியவற்றை, அதாவது சிவபூஜை போன்றவற்றைச் செய்யத்தான் வேண்டும். மனம் பக்குவம் பெற்றுவிட்டால், பிறகு அதிக நாள் பூஜை செய்யத் தேவை யில்லை. அந்த நிலையில் மனம் எப்போதும் இறைவனிடம் ஒன்றியே இருக்கும்; தெய்வ நினைவும் சிந்தனையும் எப்போதும் இருக்கும்.’

புத்தகம் :ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் இரண்டாம் பகுதி

பக்கம் :161,162,163

May be an image of 1 person, temple and text

All reactions:

2You and 1 other