Skip to content
- தெருவில் பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது
பின்னால் வரும் சத்தம் கேட்கிறதா?
ஒதுங்கிப் போய்விட்டால் நல்லது உனக்கு.
இல்லாவிட்டால் ஆபத்து தெரிந்துகொள்.!
- தெருவில் பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது
பிள்ளைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
பதட்டமாக நான் பார்த்துக் கொண்டிருகிறேன்
கடந்து போகிறது பஸ்
- தெருவில் பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது.
பஸ்ஸை நோக்கிக் கல்
அடிக்கிறார்கள்
கண்ணாடி சில்லுசில்லாக
நொருங்கி விழுகிறது
டிரைவர் மருத்துவமனையில் அனுமதி
- தெருவில் பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது
உரிய நேரத்தில்
பஸ் வரவேண்டும்
இல்லாவிட்டால் புறப்பட்டுவிடும் நிற்காமல் டிரெயின்
திட்டம் தவிடுபொடி ஆகிவிடும்
- தெருவில் பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது
நான் பஸ்ஸைப்பற்றி
கவலைப் பட்டதில்லை
எந்தப் பஸ் எங்கிருந்து
எங்கே
போகிறது. யார் போகிறார்கள்?