ரேவதி பாலு/அதிரடி அடுக்குமாடி கல்லூரி சாலை

01.03.24 அன்று கதைஞர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் விமர்சனம் செய்யப்பட்ட கதை

குவிக்கம் திரு சுந்தரராஜன் எழுதிய இந்த இளமை கொப்பளிக்கும் சிறுகதைக்கு கல்லூரி சாலை அப்படின்னு தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் கதை அதிரடியாக தான் ஆரம்பிக்கிறது .

ஒரு தொழில்நுட்ப கல்வி வளாகத்தில் நடக்கும் கலை விழா. அதைப் பற்றி தான் இந்த சிறுகதை .

இந்த கலை விழா பற்றிய வர்ணனைகள் எல்லாம் பார்க்கும்போது நம்ம ஐஐடியில் வருஷா வருஷம் சாரங் அப்படின்னு ஒரு கலை விழா நடக்குமே அந்த மாதிரி தோன்றுகிறது. அதுக்கு எல்லா கல்லூரியில் இருந்தும் வருவாங்க. இந்தியாவில் இருக்கும் எல்லா கல்லூரி மாணவர்கள் எல்லாம் கூட வருவாங்க .
இதுல வெளிநாட்டில் இருந்தும் ஒரு குழு வந்து பாடி ஆடுவதாக காண்பிக்கப்படுகிறது.

கதாநாயகன் மகேஷை முதலிலேயே ஒரு அதிரடி முரட்டு காளையாக காண்பிக்கிறார்கள்.

தன் சகோதரியா இன்னொரு பெண்ணா என்று தெரியாமல் முரட்டுத்தனமாக தன் சகோதரி அகிலாவின் தோழி ஜானுவை தூக்குவதும் பிறகு விஷயம் தெரிந்த பிறகு கீழே விட்டு விடுவதும் என்று அவனுடைய கதாபாத்திரமே ஒரு முரட்டுத்தனமாக ஆர்ப்பாட்டமாக தான் அறிமுகமாகிறது. இந்த விழாவில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குழுவோட சேர்ந்து அவனும் ஆடி பாடப் போகிறான் அப்படின்னு அவனுடைய தங்கை அகிலா இந்த நிகழ்ச்சிக்காக தான் அழைத்துக் கொண்டு வந்திருக்கும் தன் தோழி ஜானு விடம் சொல்கிறாள்.

ஜானுவை அகிலா என்று நினைத்து தான் கட்டி தூக்கியதற்காக அவன் மன்னிப்பு கேட்டு விட்டு போகும் போது அந்த வயதுக்கு ஏற்ற உணர்ச்சி கிளர்ச்சி ஜானுவிற்கு ஏற்படுகிறது .
ஒரு ஆண் தன்னைத் தொட்டு தூக்கியது ஷாக் அடித்தது போல இருந்தது அவளுக்கு.

நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டது.
விறு விறு பரபர என்று போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பார்க்கும் இடமெல்லாம் ஒரே இளமை துள்ளல், அட்டகாசம், ஆரவாரம் ஆர்ப்பாட்டங்கள் கூக்குரல்கள் கூச்சல்கள் எல்லாம்.

அந்த கால காதல் தேசம் படத்தில் கல்லூரி சாலை என்று பாடுவார்கள் அந்த மாதிரி தோன்றுகிறது இந்த நிகழ்ச்சியை பார்த்தால்.

இந்த கல்லூரி வாழ்க்கை என்பது பள்ளி வாழ்க்கைக்கும் அதன் பிறகு வேலை திருமணம் என்று சம்சார பந்தத்தில் குதிப்பதற்கும் முன் இருக்கும் ஒரு அழகான தென்றல் காற்று போல வருடி செல்லும் இடைவேளை.

இந்த மாணவர்களின் மனதெல்லாம் இளமை துள்ளல் உற்சாகம் சந்தோஷம் பிரதிபலிக்கிறது. அந்த இடம் முழுவதும் ஒரே இளமை துள்ளாட்டம் தான்.

மகேஷ் வெளிநாட்டிலிருந்து அழைத்து வந்திருக்கும் ஒரு குழுவின் ஆட்டம் பாட்டமும் ஆரம்பம் ஆகிறது .
எல்லோரும் உட்கார்ந்து கொண்டு அதை பார்த்து களிக்க தயாராக இருக்கிறார்கள் .
அது எல்லோரையும் கூடவே ஆடவும் பாடவும் வைக்கும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி.
அமெரிக்காவின் மைக்கேல் ஜாக்சன் மடோனா ஷகிலா எல்லாரையும் தூக்கி சாப்பிடும் ஷோ அது. பார்க்க வந்த அத்தனை பேரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள்.

அமெரிக்காவின் டாப் டிஜே னீனா அவ தான் இந்த குழுவுக்கு தலைவி .
ஆட்டம் பாட்டத்தோடு நவரசத்தையும் காட்டுகிறாள் அவள்.
கூட ஆடும் எட்டு பேர்களையும் வில்லன் போல் பாவித்து டான்ஸ் ஆடும் போது ஒவ்வொருத்தனையும் கிட்டத்தட்ட தூக்கி போட்டு மிதிக்கிறாள். சரியான அமெரிக்க குத்துப்பாட்டு ஆர்ப்பாட்டமாக ஒலிக்கிறது .
ஒருத்தன் தலையில் நின்னு அடி, ஒருத்தனை கீழ தள்ளி அவன் உடம்பு மேல டான்ஸ் ஆடறா. இவ்வளவு நேரம் எப்படி போச்சுன்னு யாருக்குமே தெரியல.

இப்ப கடைசியில் தான் இதோட கிளைமாக்ஸ் வருது. அந்த ஷோவோட தீம் என்ன என்பதை கண்டுபிடிப்பவர்களுக்கு நீனாவிடம் இருந்து கிஸ் கிடைக்கும் என்று அறிவிக்கிறார்கள். அதுவும் இரண்டு நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும் .

ஒரு குறிப்பிட்ட மொபைல் நம்பருக்கு பெயருடன் எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும் .கம்ப்யூட்டர் அதை சரி பார்த்து சரியான விடையை கண்டுபிடிக்கும்.

ஷோ கலக்கல் ஷோ ஆனா தீம் என்னங்கறது யாருக்குமே புரியவில்லை. பெரிய அளவு ஸ்கிரீனில் அனுப்புற நம்பரும் பேரும் வந்து கொண்டே இருக்கிறது. விடை தவறு அப்படிங்கற குறிப்போட யார் யாரோ அனுப்புறாங்க என்று கம்ப்யூட்டர் சொல்றது.

ஒரு வழியா அந்த ரெண்டு நிமிஷம் முடியறது. எல்லா விடைகளும் தவறு அப்படின்னு நினைச்சுக்கிட்டே இருக்கும் போது திடீர்னு ஒரு பிளாஷ். சரியான விடை வந்துவிட்டது. அனுப்பியவர் ஜானு என்று கம்ப்யூட்டர் சொல்கிறது.

மேடையில் இருந்து ஸ்பாட்லைட் வந்து ஜானுவைத் தேடுகிறது .
அகிலாவும் மற்ற தோழிகளும் ஜானுவைத் தூக்கிக் கொண்டு மேடைக்கு போறாங்க .
இன்றைய ஷோவின் தீம் இ டி எம் .ஈஸ்வரி தேவி மகாத்மியம் மகிஷாசுரமர்த்தினி தேவி அசுரர்களை அழிக்கும் தீம் அப்படின்னு ஜானு சொல்ல சொல்ல மேடையில் நின்று கொண்டிருக்கும் நடிகர்கள் அத்தனை பேரும் அப்படியே ஜானுவின் காலடியில் விழுந்தார்கள். மகேஷும் அவள் காலடியில் மண்டியிட்டு நிற்கிறான்.
அமெரிக்க பிரபல டி.ஜே. கட்டி பிடித்து அவளுக்கு மேடையிலேயே ஒரு லிப் கிஸ் கொடுக்கிறாள்.
வந்து இருந்த அனைத்து கும்பலும் ஆரவாரம் செய்ய நிகழ்ச்சி முடிந்தது. அதற்கு பிறகு ஜானுவும் மகேஷும் மீண்டும் சந்தித்தார்களா என்பது அதிரடி அடுக்குமாடி புத்தகம் படித்தால் தான் தெரியும் என்று ஆசிரியர் சொல்கிறார்.

அது தெரிந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தோன்றுகிறது.

அன்று நடந்தது ஒரு இனிமையான நிகழ்வு. அது என்றென்றும் அவர்களுடைய கல்லூரி கால நினைவுகளில் பசுமையாக இருக்கும்.
இத்துடன் இனிமையாக கதை முடிகிறது.

One Comment on “ரேவதி பாலு/அதிரடி அடுக்குமாடி கல்லூரி சாலை”

Comments are closed.