சோ’வின்முன்னுரை /யாருக்கும் வெட்கமில்லை

என்னைப் பற்றி நானே எழுதிக் கொள்ளப் போகி றேன்…!
தன்னைப் பற்றித் தானே பேசிக் கொள்பவன் அகம்பாவியாகவோ அல்லது முட்டாளாகவோ இருக்க வேண்டும். நான் அகம்பாவி அல்ல.
என்னுடைய நாடகங்களுக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பில் நூற்றில் ஒரு பங்குகூட, அநேக விமர்சகர்களிடையே, நாடக விற்பன்னர்களிடையே இருப்பதில்லை. ‘இவனுடைய நாடகங்கள் சென்னை நகரத்தைத் தாண்டினால் யாரும் ரசிக்க மாட்டார்கள்’ என்று முதலில் கூறிக் கொண்டிருந்தார்கள். நாளடை வில் என்னுடைய நாடகங்கள் சென்னையைத் தாண்டித் தமிழகமெங்கும் பரவி, அதற்குமேல் வடநாட்டிலும் சென்று, வேறு சில மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டு, ரசிக்கப்பட்டன. உடனே ‘இவனுடைய நாட கங்கள் காலத்தை வென்று நிற்காது. அழிந்து விடும்’ என்று கூறுகிறார்கள்.
‘காலத்தைக் கடந்து நிற்கும் நாடகங்கள் எவை? இன்றே அழியக்கூடியவை எவை?” என்று யார் தீர்மானிப்பது? என் நாடகங்கள் பற்றி விமர்சனம் செய்பவர்கள் என்ன நாடக ஜோசியர்களா? காலத்தை வென்று நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்களும், அரசியல் சித்தாந் தங்களும் எவை என்றுகூட யாரும் சரியாகக் கூறியது இல்லை. அப்படியிருக்க, காலத்தை வெல்லும் நாடகம் எது என்று எவரால் கூற முடியும்? ஷேக்ஸ்பியரும், காளிதாசனும் எழுதியவை எல்லாம் காலத்தை வென்று நிற்கும் என்று அவர்கள் காலத்தில் யாராவது கூறினார்களா? என்னை ஷேக்ஸ்பியருடனோ, காளி தாசனுடனோ நான் ஒப்பிட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களுடைய எழுத்துக்களே காலத்தை வெல்லக் கூடியவை என்று அவர்கள் காலத்தில் கூறப் படாத போது, என் எழுத்துக்கள் காலத்தை வெல்லக் கூடியவையா, இல்லையா என்பது பற்றிய சிந்த னையே எனக்கு அநாவசியம். இன்றைய நாடக அபி மானிகளால் ரசிக்கப்படாத நாடகங்கள்தான் காலத்தைக் கடந்து நிற்கும் என்று நாடக விற்பன்னர்கள் அபிப் பிராயப்பட்டால், ‘அப்படிப்பட்ட நாடகங்களை நான் எழுதாமல் இருக்க வேண்டுமே’ என்றுதான் நான் இறைவனை வேண்டிக் கொள்வேன். இன்றைய நாடக ரசிகர்களை என் நாடகங்கள் திருப்திப்படுத்துகின்றன. இன்றைய ரசிகர்களாலேயே தூக்கியெறியப்பட்டிருந் தால், என் நாடகம் நிச்சயம் நாளை வாழ முடியாது. இன்று வாழ்கின்றன என் நாடகங்கள். அது போதும் எனக்கு!
‘இன்றைய மக்கள் ரசிப்பதெல்லாம் நல்லவையே’ என்று நான் கூற முற்படவில்லை. பல கீழ்த்தரமான சினிமாக்கள்கூட வெற்றிகரமாக ஓடுகின்றன. ஆனால், நாடக ரசிகர்கள் சினிமா ரசிகர்களைவிட விவரம் அறிந்தவர்கள். ஆகையால்தான் அவர்கள் என் நாட கத்தை ரசிப்பது பற்றி என்னால் பெருமைப்பட முடி கிறது. கீழ்த்தரமான ரசனைகளுக்கு என் நாடகங்களில் என்றுமே இடமிருந்ததில்லை என்று என்னால் அடித்துக் கூற முடியும். விரசம், ஆபாசம் என்னுடைய எந்த நாட கத்திலும் தலை காட்டியதில்லை. இந்த வகையில் பார்த்தால் தரமான நாடகங்களை எழுதுகிறேனோ இல்லையோ, கீழ்த்தர நாடகங்களை எழுதுவதில்லை என்று சொல்லிக் கொள்ள உரிமை இருக்கிறது.
அரசியலுக்கு என் நாடகங்களில் அதிக இடமளிக் கிறேன் என்பது என்மீது உள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்று. ஆம். அரசியலுக்கு இடமளிக்கத்தான் செய்கி றேன். என்ன தவறு? காதலுக்கும், அண்ணன் தம்பி பாசத்திற்கும், அம்மா அப்பா கஷ்டங்களுக்கும், கணவன் மனைவி உறவுகளுக்கும்தான் நாடகங்களில் இடம் இருக்க வேண்டுமா? இப்படிப்பட்ட அர்த்தமில்லாத வரைமுறைகளை வகுத்துக் கொண்டால், எல்லா நாட கங்களும் சேர்ந்து ஒரே மாதிரி அழுது வடியும். என் நாடகங்கள் வேறு விதமாகத்தான் அழுது வடியட் டுமே? என்ன தவறு? நகைச்சுவைக்கு நான் முக்கியத் துவம் அளிப்பதும் பலருக்குப்பொறுப்பதில்லை. தேச வ மும், மக்களும் அழுது கொண்டே இருக்கும்போது, ! சிரித்து மகிழ சந்தர்ப்பம் கொடுப்பது தவறா? சிரிக்க மன மில்லாத சிடுமூஞ்சிகள் என் நாடகத்தைப் பார்த்துத்தான் தீர வேண்டுமென நான் கட்டாயப்படுத்தவில்லையே?
‘உரையாடல்களில் ஆங்கில வார்த்தைகளை வாக்கியங்களை இடையிடையே பயன்படுத்துகிறானே, அநியாயம்! தமிழ் மொழிக்குத் துரோகம்!’ என்றும் சில கூச்சல்கள் அவ்வப்போது கிளம்பி விடுகின்றன. அர்த்த மற்ற குற்றச்சாட்டு! நாம் பேசும் போது எவ்வளவு முறைகள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறோம்? இன் றைய நிலையில் ஆங்கிலம் நமது வீடுகளிலும், காரி யாலயங்களிலும் வாழ்க்கையின் பல துறைகளிலும் பயன்படத்தான் செய்கிறது. நாடகத்தில் அது வரு வது செயற்கை அல்ல. இயற்கை! உரையாடல்களில் ஆங்கிலத்தைப் புகுத்துவது தமிழ்த் துரோகம் அல்ல. வேறு மொழி கிட்டே வந்தாலே தமிழ் பொசுங்கி விடுமா? தமிழ் என்ன தொட்டால் சிணுங்கியா? அவ் வளவு பலவீனமான மொழியா தமிழ்? தாழ்வு மனப் பான்மை கொண்டவர்கள்தான் ஆங்கிலத்தைப் பார்த்து அஞ்ச வேண்டும். எனக்குத் தாழ்வு மனப்பான்மை கிடையாது. தமிழின் தரத்தின் மீதும், அதன் சக்தியின் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை இல்லாதவர்கள் பிதற்றலுக்குப் பயந்து நான் என் எழுத் துக்களை மாற்றப் போவதில்லை.
நல்ல ரசனை உள்ளவர்களுக்கே நான் எழுது கிறேன் என்பது என் வாதம். இன்றுவரை எனக்கு வெற்றி தான். நாளை படுதோல்வி ஏற்படலாம். வெற்றி எனக்கு வெறியைத் தரவில்லை. தோல்வி எனக்குச் சோர்வைத் தராது. வக்கீலாக இருந்தேன்; நாடக நடிகனானேன்; நாடக ஆசிரியரானேன்; சினிமா நடிகனானேன்; சினிமா கதை வசன கர்த்தாவானேன்; டைரக்டரானேன்; பத்தி ரிகை ஆசிரியரானேன் (சக்கரம் ஓடுகிறது)! இதில் எல்லாவற்றிலும் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறேன். ஆனால் இவற்றில் எதுவுமே சாஸ்வதமா? என்று நான் நினைக்கவில்லை. ‘நாளையே எல்லாவற்றிலும் தோல்வி காணலாம்’ என்று எனக்கு நானே நினைவுறுத்திக் கொண்டு என்னை அந்நிலைக்குத் தயாராக்கிக் கொண்டு தான் இருக்கிறேன்.
ஆனால் எனக்குத் தோல்வி வரும் போது அது என் னுடைய விமர்சகர்களால் இருக்காது. என் திறமை இன்மையாலும், தவறுகளாலும்தான் இருக்கும். ஏனென் றால், எனக்கு வெற்றிகள் வந்த போது விமர்சகர்களால் வரவில்லை, என் திறமையினாலும், அதிருஷ்டத்தாலும்தான் வந்தது.
திமிருடன் எழுதப்பட்ட முன்னுரையாகத் தோன்ற லாம். தோற்றம்தான் அப்படி; எண்ணம் அப்படியல்ல. உண்மை கசக்கும். இந்த முன்னுரை கசக்கட்டும்; கவலையில்லை.

One Comment on “சோ’வின்முன்னுரை /யாருக்கும் வெட்கமில்லை”

Comments are closed.