
- தியாக புத்தி
நாட்டை உத்தாரணம் செய்யும் பெரிய முயற்சியில் தனி மனிதனின் சுக துக்கங்களைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூட இடம் இல்லை. “சில வாலிபர்களேனும் தங்கள் சுகத்தை, ஏன், உயிரையே கூடத் தியாகம் செய்தால்தான் பாரத் நாட்டை உயிர்ப்பிக்கலாம்” என்று பாரதியார் உறுதியாகத் தீர்மானித்தவராதலால், இக்கஷ்டங்கள் அவருக்கு லக்ஷ்யம் இல்லாமல் இருந்தன.
ஜனங்கள் உள்ளத்தில் விழிப்பை உண்டாக்கி, உணர்வில் கிளர்ச்சியை எழுப்பி, அதனின்றும் ஆவேசப் புயற்காற்று ஏற்படுத்தி, மக்களிடையே சொல்லுவதற்கும் ஆக்குவதற்கும் அரிய செயல்கள் செய்பவர்கள் பராசக்தியின் இன்னருள் பெற்றவர்கள். மேனாட்டினரின் லக்ஷ்யம் பேராசையையும், பலங் குறைந்த நாட்டை அடிமைப்படுத்தும் கெட்ட எண்ணத்தையும் அடிப்படையாகக் கொண்டது; நம் நாட்டு லக்ஷ்யமோ தியாகத்தையோ, சத்தியத்தையும், அஹிம்ஸையையும் அடிப்படையாகக் கொண்டது.
பாரதியாரின் உள்ளத்தில் நாட்டிற்கு ஒவ்வொருவனும் ஆற்ற வேண்டிய கடமையைக் குறித்த போராட்டம் நடைபெற்றது. நாட்டின் அடிமை நிலை ஒருபுறம், குடும்பர் பொறுப்பு ஒருபுறம் அவரைப் பற்றியிழுத்தன. எல்லாம் அவர் முக்கியமானது என்று எண்ணிய ராஜீயப் பாரதநாட்டின் வருங்கால க்ஷேமத்தையும் உத்தேசித்து, அடிக்கடி காலத்திற்குத் தக்கபடி புதிய மாறுதல்களையும், புதிய முறைகளையும் நாம் அனுஷ்டிக்க வேண்டும் என்று அவர் துடிதுடித்தார். அவர் தேச சேவைக்கு எத்தனையோ விக்கினங்கள் ஏற்பட்டன. ‘மானம் சிறிதென்றெண்ணி’ வாழ்வதைக் காட்டிலும் தமது குலமே அதனால் அழிந்து போனாலும் தாய்நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடனை ஆற்றியே தீரவேண்டும் என்று மனத்தில் திட சங்கற்பம் செய்து கொண்டார். கையில் காசு கிடையாது. தண்பர்கள் பந்துக்கள் உதவியும் இல்லை. சர்க்காரோ ‘வந்தே மாதரம்’ என்று சொன்னாலே வாய்ப்பூட்டிடும் காலம்! நம் பழம் பெருமைகளை உயர்த்திக் கதை பேசுபவர்களே அதிகம். தேச விடுதலைக்கு ஆன முயற்சி செய்வோர் அக்காலத்தில் மிகக்குறைவு.
“பகவானைத் தரிசிக்கத் தாகம் ஏற்பட்டாலொழிய அவனைக் காண இயலாது. தண்ணீரில் மூழ்கியவனுக்கு உயிர் வாழ்ச் சுவாஸம் எப்படி முக்கியமோ, அதுபோல ஒரு பாரத இளைஞனுக்குச் சுதந்திரதாகம் முக்கியம்” என்று பாரதியார் கருதினார். சாதாரணமாக ஒரு குடும்பத்தைவிட்டு ஊரை மட்டும் காப்பாற்றுவது கூடக் கடினந்தான். ஒரு தேசத்தையே அடிமை நிலை நீக்கி உன்னத நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் ஆவல் எல்லா மனிதருக்கும் ஏற்படாது; மஹாசக்தியின் திருவருள் சுரந்தவர்களுக்குத்தான் ஏற்படும். அதனால்தான், “கடவுள் குடிகொள்ளும் உள்ளம் படைத்தவர்” என்று கூறப்பட்டது.
செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்”
Comments are closed.