
அழகிய சிங்கரின் இன்றைய என்பா
🪷
போதையை நாம் நெருங்கக் கூடாது
பள்ளிப் பிள்ளைகளும் போதை மருந்தின்
பிடியில்; அறியா வயதில், வேண்டாம்
இந்தப் பொல்லா பழக்கம்.
🪷
போதையை நாம்
நெருங்கக் கூடாது
சேரா பழக்கத்தால்
சாராய போதை!
வேரை அறுத்து வென்னீர் பாய்ச்சும்
பழக்கத்தை இன்றே விடு
🪷
போதையை நாம் நெருங்கக் கூடாது.
“பெண் போதை பொல்லாதது” என்று,
பெரியோர் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
பூவையரிடமிருந்து தப்பினார் எவர்?
🪷
போதையை நாம்
நெருங்கக் கூடாது.
மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை புகழாசை
போதை மிக தரும்; ஆதலால்,
ஆசையை விட்டு ஒழி.
🪷
போதையை நாம் நெருங்கக் கூடாது.
புகை பிடிப்பதில் என்ன உல்லாசம்?
புற்றுநோய்க்கு அல்லவா அது ஆரம்பம்!
கற்றுக் கொள்ளாதே என்றும்
🪷
