பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை
**
ஆடும் கிளியே
அசையாமல் நின்று
என்ன சொல்ல வருகிறாய் !
கொஞ்சும் கிள்ளை மொழியில் பேசு
கயிற்றில் தொங்கும் நீ
கீழே இறங்கி விடு!
நெஞ்சம் பதறுகிறது
சர்க்கஸ்காரன் ஜோதிடக்காரன்
கையில் அகப்பட்டால்
உன் சுதந்திரம்
பறி போய் விடும்
பார்த்தது போதும்
பறந்து விடு கிளியே!

இருந்தாலும் சில, பல கிளிகள் சிக்கி விடுகிறது