தேடுதல் வேட்டை

சுரேஷ் ராஜகோபாலன்  

வேகமாக வந்தவன் வண்டியை நிறுத்தினான் வீட்டு வாசலில். உள்ளே ஓடினான். தன் பெட்டியில் எதோ துழாவினான். கிடைக்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது.


மனைவியைக் கூப்பிட்டான்.

“என்ன”
“நான் பார்க்கவில்லையே?” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
“குழந்தைக் கூடையில் இருக்கிறதான்னு பார்க்கிறேன்” என்றாள்.
இருவரும் ஓடினார்கள்.
அங்கும்  கிடைக்கவில்லை..
இன்னொரு அலமாரியில் தேட முற்பட்டனர்.
அங்கேயும் இல்லை .
கொஞ்சம் வெறுப்பாக இருந்தது. நேரத்தைப் பார்த்தான், மணி ஆகிவிட்டது. அலுவலகம் செல்ல முற்பட்டான்.
வண்டியில் ஏறி எங்கிருக்குமென்ற யோசனையுடன் சென்றான்.
திடீரென்று அலுவலகத்தில் நேற்று முன்தினம் வைத்து விட்டு வந்தது ஞாபகம் வந்தது . உடனே உடலெல்லாம் பூரிப்பு. வண்டி வேகமெடுத்தது.