ஓநாயும் வெள்ளாடும்/லேவ் தல்ஸ்தோய்

(எறும்பும் புறாவும் என்ற புத்தகத்திலிருந்து)

பாறை நிறைந்த மலையின் மீது வெள்ளாடு ஒன்று மேய்வதை ஓர் ஓநாய் கண்டது. ஆனால் அதனிடம் போக முடியவில்லை.


“ஏன் நீ இங்கு கீழே வரக் கூடாது?” என்று ஓநாய் கேட்டது. “தரை சமதனமாக இருக்கிறது, புற்கள் இனிமையானவை.

ஆனால் வெள்ளாடு சொன்னது:
‘நீ என்னைக் கீழே அழைப்பதற்கு அதுவன்று காரணம், ஓநாயே. உனது வயிற்றைப் பற்றித்தான் கவ லைப்படுகிறாயே தவிர என்னைப் பற்றி அன்று.’