மனக்கோயிலில் மணிகள்/பி ஸ்ரீ

எனது நீண்ட வாழ்க்கையில் கண்டும் கேட்டும் அறிமுகப்படுத்திக்கொண்ட தமிழன்பர்களையும் தமிழறிஞர் களையும் நான் இன்றைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புவதைத் தெரிந்து கொண்ட நண்பர் ஒருவர், என்னிடம் விரைந்து வந்தார். “உள்ளது உள்ளபடியே உன்னால் எழுத முடியுமா? வரலாற்றுச் செய்திகளாக அவற்றை தாங்கள் ஏற்றுக் கொள்ளலாமா?” என்று கேட்டார். எதை யும் மெய்யா, பொய்யா-என்று தம் ஆராய்ச்சித் தராசில் எடைபோட்டுப் பார்ப்பவர் அவர்.

பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில், “நானே கண்ணாரக் கண்டது” என்ற தலைப்பில் வெளி வந்திருந்த ஒரு கட்டுரைப் பகுதியைப் படித்துக் காட்டினேன். ஒரு நிகழ்ச்சியைச் சுமார் 5,000 பேர் நேரில் பார்த்தார்கள். அவர்களில் சிலர் பத்திரிகை நிருபர்கள். இந்த நிருபர்கள் தங்கள் பத்திரிகைகளுக்கு அந்நிகழ்ச்சி கு றித்துச் செய்தி அனுப்பினார்கள். ஒரு நாடக அரங்கில் ஒருவனை இளம்பெண் ஒருத்தி அடித்துவிட்டாள் என்பது செய்தியின் சாரம். இச்செய்தி பத்திரிகைகளில் என்ன பாடு பட்டிருக்கிறது!
அவள், கன்னத்தில் அடித்ததாகவும் அவன் கலங்கிப் பின் வாங்கியதாகவும், ஒரு பத்திரிகைச் செய்தி. சிறிதும் கலங்காது நின்று கொண்டிருந்தான் என்றது மற்றொரு பத்திரிகை. பூச்செண்டால் அடித்ததாக ஒரு செய்தி; வேறொரு பத்திரிகையில் மும்முறை அடித்ததாகவும், அரை டசன் அடிகள் கொடுத்ததாகவும் வேறு செய்திகள். அப் பொழுது அவன் தன் நண்பர்களை நோக்கிக் கைநீட்டி, “நீங்கள் வரவேண்டாம்” என்று சைகை காட்டியதாக ஒரு செய்தி, நண்பர்கள் அந்த இடம் நோக்கி விரைந்ததாக ஒரு செய்தி. இதை ஓர் அரசியல் கட்சிச் சண்டையாக வருணித்து மூக்கில் இரத்தம் வழிந்ததாகவும், முட்டி யுத்தம் நடந்ததாக வும் எழுதியது ஒரு பத்திரிகை.

அனுபவம் உள்ள நிருபர்கள் அனுப்பி வைத்த செய்திகள் இவையென்றால் அக்கூட்டத்திலே பிறர் இச்செய்தி குறித்து எத்தகைய நினைவுகளுடன் வீடு சென்றார்களோ-கடவுளுக் குத்தான் வெளிச்சம்! நேரில் கண்ட நிகழ்ச்சியைப் பலர் பலவிதமாக விவரிக்கக்கூடும் என்பதையும், அது உருமாறிப் பல விசித்திரப் பிறவிகள் எடுக்கக்கூடும் என்பதையும் உள நூலார் சோதனைகள் செய்து பார்த்து உறுதிப்படுத்தியிருக் கிறார்கள். அத்தகைய உண்மை வரலாற்றுச் செய்திகளை இக் கட்டுரை வரிசையில் நான் விவரிக்கப் போவதில்லை என்று நண்பரிடம் சொன்னேன். இங்கே, கவி ரவீந்திரநாத தாகூரைப் பின்பற்றி வேறொரு முறையைக் கையாளப் போவதாகவும் தெரிவித்தேன்.

நினைவுச் சித்திரமுறை

தாம் அறிந்த பங்கிம் சந்திரரை (‘ஆனந்த மட’த்தின் ஆசிரியரை)க் கவி ரவீந்திரர் பின்வருமாறு அறிமுகப்படுத்தி யுள்ளார்:

“அந்த உருவத்தைப் பார்த்ததுமே, எந்தக் கூட்டத் திலும் கவனத்தை ஈர்க்கத்தக்க கம்பீர ஒளி வாய்ந்தவர் என்பது பளிச்சென்று தெரிந்தது. எழுத்துப் பொலிவுபோல் தோற்றப் பொலிவும் இசைந்திருக்கிறதே என்று வியப் புற்றேன். ஊடுருவும் நோக்கு, கூரிய மூக்கு, இறுக மூடிய உதடுகள் எல்லாம் பெருஞ் சக்தியைப் புலப்படுத்தின. இதயத்தை அணைத்து மடங்கிய கைகளுடன் தோன்றிய அவர், சாதாரண மக்கள் குழாத்துள் ஒரு கோபுரம் போல் காணப்பட்டார். அறிவுலகிலே ஓர் இராட்சதப் பிறவி அந்த முகத்திலே ‘மக்களின் உண்மை அரசர் இவரே!’ என்ற அதிகார முத்திரை பொறித்திருந்தது அவரே பங்கிம் பாபு என்று அறிந்தேன்.”

ஒவ்வொருவன் உள்ளத்திற்குள்ளும் ஒரு சித்திரசாலை இருக்கிறது. இதைக் கவித்திறன் வாய்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றவர்களுக்குச் சித்திரசாலை அடை பட்டுத்தான் கிடக்கும். அக்கதவைத் திறக்கும் திறவுகோல் இவர்களிடம் இல்லை. கவி ரவீந்திரர் சொல்லுகிறார்: “என் – வாழ்க்கைக் கதைக்குச் சில தகவல்கள் வேண்டுமே என்று என் நினைவுச் சித்திரசாலையை நோக்கினேன். கதவைத் பார்த்ததும், ‘வாழ்க்கை நினைவுகள் வேறு, வாழ்க்கை வரலாறு வேறு’ என்ற உண்மையைக் கண்டு பிடித்தேன். எனக்குள்ளே கண்ணுக்குத் தெரியாமல் செயலாற்றி வரும் கலைஞன், வாழ்க்கையைக் ‘காப்பி’யடிப்பது இல்லை. தன் கற்பனை வளம் தோன்றச் சித்தரிப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கிறான். இதயக் காதலின் வேகத்து டன் அவன் சித்தரித்துத் தருவதால் இந்த நினைவுச் சித்திரங்களை ஒரு நீதிமன்றத்தில் சாட்சியாக உபயோகித்துக் கொள்ள முடியாது.”

எனினும், நினைவுச் சித்திரங்கள் இன்றியமையாதவை. அதிசயமான வசிய சக்தியுள்ளவை என்கிறார் தாகூர். இவற்றைத் தக்க சொற்சித்திரங்களாக வெளியிட முடியுமானால் இவற்றுக்கு இலக்கியத்தில் ஓர் இடம் கிடைத்துவிடுகிறது என்றும் கவிஞர் கூறியுள்ளார். “நினைவுகள்” என்ற தம் அளின் முகப்பிலே இதே முறையில் “நான் அறிந்த தமிழ் மணி”களை இயன்ற வரையில் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்த முயல்வதாகக் கூறினேன் நண்பரிடம்.

இக்கட்டுரைகளில் செய்திகள் என் ஆன்ம சரித்திரத் துடன் கலந்து வெளிவரும். இவற்றைச் செய்திகள் என்று சொல்வதைக் காட்டிலும் சொற்சித்திரங்கள், நினைவுச் சித்திரங்கள் எனக் குறிப்பிடுவதே பொருத்தமாகும். இம் முறையில் உள்ளது உள்ளபடி “ஈயடிச்சான் காப்பி” போல் செய்திகளைத் தொகுக்கப் போவதில்லை. அப்படித் தொகுப் பதும் எனக்குச் சாத்தியமில்லை. என் சுவைக்கு இசைந்தவாறு செய்திகளில் கூட்டல் கழித்தல்களைச் செய்வேன். பெரிது சிறிதாகும், சிறிது பெரிதாகும். முன் பின்னாகவும் பின் முன்னாகவும் அமைவதும் உண்டு.
சுருங்கச் சொன்னால், நான் இங்கே வரலாற்று முறையைப் பின்பற்றப் போவதில்லை; சித்திர (இலக்கிய) முறையைத் தான் பின்பற்றுவேன். ஒழுங்காக நாட்குறிப்பு எழுதி வைக்கும் பழக்கம் இல்லாதவன்; அத்தகைய குறிப்புகள் கிடைத்திருந்தாலும் வரலாற்றுச் செய்தி முறையில் எழுது வதுதான் இங்கு என் உத்தேசமில்லையே!

தமிழ்த் தாத்தாவும் நினைவுச் சித்திர முறையும்

“தமிழ்த் தாத்தா” என்று தமிழகம் போற்றி வரும் டாக்டர் உ.வே. சாமிநாதையரின் “நினைவு மஞ்சரி” என்ற கட்டுரைத் தொகுப்பை வாசித்திருப்பவர்கள், நினைவுச் சித்திர முறையின் அருமை பெருமைகளைச் சிறிதளவு அறிந் திருக்கக்கூடும். ஏடு தேடிய யாத்திரைகளாலும் பிற அனு பவங்களாலும் தமக்குக் கிடைத்திருந்த நினைவுகளை இவரும் சுவையற்ற வரலாற்றுச் செய்திகளைப் போல் தருவதில்லை அவற்றுள் பல, ஓர் அளவு வண்ணம் தீட்டியசித்திரங்களால இவரது நினைவுக் களஞ்சி பத்திலிருந்து வெளிப்பட்டு வருவதைக் காணலாம். உதாரணமாக “சிறை நீக்கிய செய்யுள்” என்ற ஒரு சுட்டுரையைப் பார்ப்போம். இது எப்படிப் பிறந்தது? என் தந்தையாரின் ஊராகிய தென்திருப்பேரைக்கு டாக்டர் சாமிநாதையர் வந்து என் சிற்றப்பாவுடன் தங்கியதுண்டு. (நான் என் அன்னையாரின் ஊராகிய விட்டலபுரத்தை உறை விடமாகக் கொண்டிருந்தேன்.) டாக்டர் சாமிநாதையரும் என் சிறிய தந்தையான அனந்தகிருஷ்ணையங்காரும் நண் பர்கள். இருவரும். தென்திருப்பேரையில் வாழ்ந்த இடைக் ப் காலப் புலவர் ஒருவர் இயற்றிய “குழைக்காதர் பாமாலை” என்ற பிரபந்தம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

குடந்தை அரசினர் கல்லூரியில் சாமிநாதையர் தமிழாசிரியராக இருந்தபோதே, இப்பாமாலைப் பிரபந்தம் குறித்துக் கேள்விப்பட்டிருந்தார். அக்கல்லூரியில் தென்திருப்பேரைவாசி ஒருவர் படித்துக் கொண்டிருந்தபொழுது, அவருடைய சமையற்காரரிடம் இப்பாமாலைப் பிரதி ஒன்றைப் பார்த்துவிட்டார் சாமிநாதையர். பாட்டும் புலவர்கதையும் உள் எத்தை உருக்கி விட்டனவாம். அச்செய்தியைத் தெரிந்து கொண்ட எனது சிறிய தந்தையார் பாமாலையைப் பற்றியும் புலவரைப் பற்றியும் சில முக்கியமான செய்திகளைத் தெரிவித் தார்.

இந்தப் பிரபந்தத்திற்குச் சாமிநாதையர் திருந்திய பதிப்பு ஒன்று வெளியிட்டிருப்பதுடன், “சிறை நீக்கிய செய்யுள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும் “புதியதும் பழையதும்” என்ற தொகுப்பு நூலில் வெளியிட்டிருக்கிறார். இச்சுட்டுரை “உள்ளது உள்ளபடியே” என்ற முறையில் வரண்ட வரலாற்றுச் செய்தியாக வெளியிடப்படவில்லை; ஒரு சிவுச் சித்திரமாகவே உருவாகியுள்ளது.
பாமாலை ஆசிரியரான நாராயண தீட்சிதர் தீர்வை செலுத்தத் தவறிவிட்டதால் அக்காலச் சட்டப்படி சிறைப் பட்டார். சிறையில் தம் ஊர்ப் பெருமாளான மகரநெடுங் இழைக்காதரை நினைத்துப் பாடிக்கொண்டிருந்தார். அக்காலத்து நாயக்க அரசரின் பிரதிநிதியாகத் திருநெல்வேலிச் சீமையை ஆண்டு வந்த வடமலையப்பனுக்குச் செய்தி தெரிந்த தால் தமக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற கருத்தை வெளியிட்டு ஒரு பாட்டையும் தீட்சிதர் தம் பாமாலையில் பாடி வைத்தார். அப்படியே வடமலையப்பன் பாமாலை ஆசிரியரை விடுதலை செய்து சம்மானித்தான். இவை அடிப்படைச் செய்திகள். இச் செய்திகளைப் பிரபந்தத்திலிருந்தும், மேலும் விவரமாக என்னுடைய சிறிய தந்தை முதலியவர்களிட மிருந்தும் தெரிந்து கொண்ட தமிழ்த்தாத்தா, ஆசிரியரின் பக்தியைப் பற்றியும் வடமலையப்பனின் அறப்பற்று, தமிழ்க் காதல், புலவரிடம் மதிப்பு ஆகியவை பற்றியும் நினைவுச் சித்திர முறையில் ஒரு சொல்லோவியம் தீட்டியுள்ளார்.
*
*
கவி ரவீந்திரரின் நினைவுச் சித்திர முறை ஓரளவு நம் தமிழ்த் தாத்தாவாலும் கையாளப்பட்டிருப்பது கண்டு, நானும் ஏறத்தாழ அதே முறையில் எழுதிப் பார்க்கத் துணி கிறேன். எனக்கு நினைவாற்றல் குறைவுதான். என் கற்பனைக் குதிரையை நொண்டி என்று சொல்லமுடியாது; எனினும் சண்டித்தனம் செய்யக் கூடியதுதான்!
இயன்ற வரையில் அறிந்தவற்றை அழகுறச் சித்தரிக்க முயன்றிருக்கும் இம்முறையை இலக்கிய இரசிகர்கள்-மனத் தராசை நேராக வைத்துக் கொண்டு நிறை போடுகிற வர்கள் – உவந்து வரவேற்பர் என்று நம்புகிறேன்.