நாகேந்திர பாரதி/விடியலின் நோக்கம்


———-
ஒவ்வொரு காலையும்
உதிப்பது உயிர்

இன்றையப் பொழுதில்
இருந்திடும் நேரம்

நாளையப் பொழுதின்
நாற்றுக்கு விதை

விதைப்பதும் காப்பதும்
களையினை எடுப்பதும்

நீரினைப் பாய்ச்சி
நேராய் வளர்ப்பதும்

அறுப்பதும் சுவைப்பதும்
அவரவர் கையில்

விடியலின் நோக்கம்
முடிவது நம்மால்

——-