விஜயலக்ஷ்மி கண்ணன்/ஓரக் கண்ணால்

கண் எதிரே தோன்றினாள்,
கவிதை ஒன்றும் பாடினாள்.
கூட வா என்றாள்
ஆடவும் தான்.
ஆட்டியும் படைத்தாள்,
முட்டியும் மோதினாள்.

ஓரக்கண்ணால் ஒரு முறை
இரக்கத்தோடு இழுத்தாள்,
மயங்கிப் போனேன்
இன்னும் எழவில்லை.

வஞ்சியின் நோக்கு கெஞ்சியது கண்டு,
கொஞ்சம் தயங்கினேன்.
கொஞ்சும் பூவே!
மஞ்சம் விரித்தேன்,
நெஞ்சிலே அமர்ந்தாய் அஞ்சுகமே!!

07.03.2024.