புதுமைப்பித்தன் என்றகதைமன்னன்

நா.விச்வநாதன்

(முக நூலிலிருந்து எடுத்தது) 

கிளர்ந்தெழ முடியாதவர்களே வழிகாட்டிகளைத்தேடுகிறார்கள்.அவர்கள் பின்பற்றுபவர்களாக இருப்பதில் விருப்பம் கொள்கிறார்கள்.

அனுசரித்துப்போகும் படைப்பாளிகளே இங்கு அதிகம்.சமூகமதிப்புஎழுத்தாளருக்கு வெகுதூரத்திலேயேஇருக்கிறது.அனுசரித்துப் போகத்தெரியாதவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.நம் புதுமைப்பித்தனுக்கு கிளர்ந்தெவரும் மனோபாவம் இருந்தது.அறச்சீற்றமிருந்தது.எனவே வாழும் காலத்தில் கஷ்டப்பட்டாலும் இன்று பேசப்படுகிறார்.எழுதவந்தது

நாற்பது வயதிற்குமேல்.தன் குறுகிய காலத்திற்குள் ஒரு குறுநிலமன்னனைப்போல் மதிக்கப்பட்டார்.சுதந்திரத்திற்காக ஏங்காதே.சுதந்திரமாக இரு என்பது புதுமைப்பித்தனின் அறிவிப்பு.கலைமகள், ஜோதி, சுதந்திரச்சங்கு,ஊழியன்,தமிழ்மணி,நாரதர் என அவரதுஎழுத்து தொடர்ந்தது.

தினமணி, தினசரிஇதழ்களில் பணியாற்றினார்.கற்பனைஉலகில் மக்கள் எப்படியெல்லாம்வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற ஆச்சரியங்களைத் தன் கதைமாந்தர்கள்வழியாகவிவரித்திருக்கிறார்

.”வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான்.உங்கள் அளவுகோல்களுக்குள்அடைபடாதிருப்பதால். நானும், நான் பிறப்பித்துவிளையாட விட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகள் அல்லர்” என்றார்.

நூறுகதைகள்எழுதினார்.அவற்றுள் நாற்பத்தெட்டுமட்டுமே அவர் வாழ்ந்த காலத்தில் வெளியாயின.”தமிழ் இலக்கிய உலகம் எழுதப்படாதவிதிகளால் முடக்கப்பட்டிருப்பதாகக்குரல் எழுப்பினார்”

கலகக்குரல். இன்னதுதான் சொல்லவேண்டும் இன்னது சொல்லக்கூடாது என ஒருதத்துவம், தவறான கருத்து இருப்பதாகவும் அதனை முறியடிக்க வேண்டும்”என்று ஆவேசப்பட்டார்.

ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தைவர்ணிப்பதிலா சமூகத்தின் தெம்பு இற்றுவிடும் என்று கிழித்தெறிந்தார். நடப்புவிவகாரங்களை எழுத்தில் கொண்டுவருவதில் கௌரவக் குறைவு ஏதுமில்லை என்றார். தன் எழுத்திலும் அதை மிகநேர்மையாக வெளிப்படுத்தினார்.”சாபவிமோசன”த்தில் இதுவரை நிலவிவந்த நம்பிக்கைகளின் மேல் கேள்விஎழுப்பினார்.

அகலிகைக்காக நின்று ராமனுக்கும் தீர்ப்பு சொல்கிறார். பொன்னகரத்தில் அவர்முழுக் கோபமும் வெளிப்படும்.கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்ஆற்றலின்உச்சம். சுயஜாதி விமரிசனமும்கூட. கல்கி விடுவாரா? நிறைய எழுத்து யுத்தம். இதுபிரசித்தமானது. புதுமைப்பித்தனின் குணம் விசேஷமானது. நட்பு போய்விடுமோ என்ற கவலையின்றி திட்டுவார்.நண்பர்கள் புதுமைப்பித்தனை இழக்க விரும்பவில்லை.புதுமைப்பித்தன் எதைச் செய்தாலும் சர்ச்சையானது.கல்கியின் “வீணை பவானி’ சிறுகதை ஜப்பானியக்கதையொன்றின் தழுவல் என்றார்.

தியாகராஜபாகவதர் நடிந்த ராஜமுக்தி படத்திற்கு வசனம் எழுதினார். பின்னர் உடல் நலிவுற்றார்.’கமலா பசிக்குது ரெண்டு வெற்றிலைபோட்டுக் கொண்டால் பசி அடங்கிப்போபோகும்’ என்பாராம்.வறுமையோடு வாழகற்றுக் கொண்ட கலைஞரே புதுமைப்பித்தன்.

‘கபாடபுரம்’ கதையே கடைசி.’ மேதை என்ற சொல்லுக்கு இலக்கணபாகத் திகழ்ந்தவர் புதுமைப்பித்தன்’ எனக.நா.சு உணர்ச்சிவசப்பட்டுவார்.சாபவிமோசனம்பற்றி ராஜாஜி மோசமானகருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும்நம்ம புதுமைப்பித்தன் அதிமேதை, அதிபுத்திசாலி என்பார். அவரது பொன்னகரமும்’ துன்பக்கேணியும் தமிழக அரசுபாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டன.

யுனிவர்சிட்டிக்கள் அந்தகாலத்தில்ஆசார வைதிக மடங்களாக விளங்கின.இக்காலத்திலும் நிலைமைமாறவில்லை.

கூடுதலாக தனவணிகத்தையும் மேற்கொண்டிருக்கின்றன அவ்வளவே. கலாமோகினி இதழ் புதுமைப்பித்தன்படத்தை அட்டைப்படமாகப் போடக் கேட்டபோது எனது மார்புக்கூடு எக்ஸ்ரே படம்இருக்கிறது அனுப்பட்டுமா என்றாராம். உடனிருந்த ரகுநாதன் க.நா.சு விற்குக்கடிதம் எழுதுகிறார்:

“புதுமைப்பித்தன்உடல்நிலை மோசம்,மருத்துவத்திற்குபணமில்லை.பண உதவிதேவை என்றுக.நா.சு விற்கு கடிதம் எழுதிவிட்டுப் பின்னர் அதை அடித்துவிட்டு “புதுமைப்பித்தன் காலமானார்” என்று எழுதுதினார்.

புதுமைப்பித்தன் மொழியில் சொல்லவேண்டும்:

இலக்கியம் எழுத்தாளனைக்கொன்றுபோட்டுவிடும்’

One Comment on “புதுமைப்பித்தன் என்றகதைமன்னன்”

Comments are closed.