
அன்று,
வழிபாட்டுக் கூட்டத்தின்
இடையில்
திடீர் விஜயம் அமைச்சர்.
உடனடி
வரவேற்புரைக்கு உத்தரவு
எனக்கு.
தலைமை எனை அழைத்து
உடன்
விண்ணப்பம் தரச் சொல்ல.
நட்பெலாம்
உதவ,பத்தே நிமிடத்தில்
அமைச்சு
அதனை வாசிப்பு. அழகான
வரவேற்பு
என்ற பாராட்டுடன்.
மறுநாள் தனது இல்லத்திற்கு
கணவரை
அனுப்பச் சொல்லிச்
சென்றார்.
அப்படியே சென்றவரை
மதிப்பாய்
நடத்தி, பரிந்துரைக் கடிதம்
துறை அமைச்சின்
ஒப்பத்தோடு
பெற்றுத் தந்தார்.
மாதம் மூன்றில் மாறுதல்
ஆணை.
நன்றி சொல்ல ஆளுக்கொரு
வகை
சொல்ல, தொலைபேசியில்
நேரில் வர
அனுமதி
கேட்டு விருந்தினர் மாளிகை
சென்றோம்.
காவல், நீதி, பொதுப்பணி, ஆட்சி என
இருந்த
பல துறையிடம் பழங்கள்
போக
தட்டு மீண்டது என்னிடமே.
ஓராண்டிற்குப் பின்
இரயில் நிலையத்தில்
கண்டு
வணங்க, அன்பான விசாரிப்பு.
உடனிருந்த
உயரதிகாரிகளிடம்
வரவேற்பு
பற்றிய பகிர்வு.
அரசியல்வாதிகளில்
இவர்
ஓர் அற்புத மனிதர்.
முழுவதும்
விவரிக்க இடமில்லை.
ஒற்றைச் சொல் ‘சொல்’
என்றால்
இவர் ஓர் குணக்குன்று.
