
(விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால 9வது கவியரங்கம், நாள் 12 03 2024 கிழமை செவ்வாய் நேரம் மாலை 05.10 “வெற்றியின் முதற்படி ” என்ற எனது கவிதையை படிப்பது சுரேஷ் ராஜகோபால், சிட்லபாக்கம், சென்னை.)
தயங்குபவர்களுக்கு தயக்கம் தான் முன்னிற்கும்
பயப்படுபவர்களுக்கு பயமே பிரதானம்
யோசிப்பவர்களுக்கு நேரம் வீணாகிப் போகும்
நினைத்தால் செய்து சாதிக்க முடியும்
கைமீறிய எதுவும் சாத்தியமில்லை
துணிவும் முயற்சியும் தான்
வெற்றியின் முதற்படி.. 1
எடுத்த வேலையில்
வெற்றி பெற்றால்
அடுத்த வேலையில்
ஆர்வம் தூண்டும்
வாழும்வரை அது தொடரும்
படிப்படியாக வெற்றி கிடைக்கும்போது
ஒன்றிரண்டு தோல்வியும் வரும்
அதனைக் கண்டு துவளாமல்
தொடர்ந்தால் மறுபடி
வெற்றியின் முதற்படி கிட்டும். 2
எடுத்த காரியம் யாவினும் வெற்றி
பெற்றாலும் அலுப்பு கூடாது,
வீராப்பு கூடாது
வீம்பு கூடாது.
தளர்ச்சி கூடாது
வாழ்வில் தொய்வு கூடாது.
