பிம்பம்……..

சிறகா…….

கண்ணாடி காட்டும் பிம்பம்
நாம் தான் ஆனால் நாமல்ல
பிறருக்கு உதவ மறுக்கும்
நான் தன்னைத் தானே காண்கையில் இளகுவது ஏனோ
இறுகப் பற்றிய பிடி தளர்ந்து
மெய் மறந்து உதவ வரும்
வேகம் என்ன
நூதனமான யாசகம்
நுண்மையாக புறம் உதிர்த்து
அகம் காணச் செய்யும் அதிர்வின்
அழகியல் விந்தையை என்னென்று சொல்வது
சூட்சுமத்தின் உட்பொருள் அறியும் உணர்வின்
உன்னத கணம் இதுவன்றோ…..