விஜயலக்ஷ்மிகண்ணன் / சக்கை

(இன்று மாலை சொல் புதிதில் நான் வாசித்த கவிதை
சொல்லுக்கு ஒரு கவிதை)

அழகிய அப்பாவி சொல், சக்கை.
பழகிய தோஷம்
வளைந்து கொடுக்கிறது.
அட சக்கை போடு போடும் என்கிறார்கள்.
அது வெறும் சக்கை,தூக்கி
கடாசு என்கிறார்களே!
மலையாளத்து சேச்சிமார் தருவது சக்கைப் பிரதமன்
விருந்தில்!
கரும்பை பிழிந்து சக்கையை வண்டி ஏற்றும் காட்சி.
சக்கையில் கிடைக்கிறது எரி வாயு.
இனிக்கும் தமிழில் முக்கனிகளில் ஒன்று பலா.
இதுவே கேரளத்தில் ஆகும் சக்கை!
பாவம் தான் சக்கை!!
ரொம்ப பாவம் தான் சக்கை!!!