சசிகலா விஸ்வநாதன்/மங்கையர் தினக் கவிதை

கல்வி தரும் ஏற்றம்;

பணி தரும் சுதந்திரம்;

தன் பற்றின முடிவுகளை
தானே எடுக்கும் முனைப்பு;

தன் முடிவுகளின் பொறுப்பைத் தானே
சுமக்கும் பொறுப்பு;

இதற்கும் அப்புறம்
வேண்டும் ஒன்று;

தன் முடிவில் பின்னடையாத
கொள்கைப் பிடிப்பு;

இதுவே வேண்டும்
இன்றைய மகளிர்க்கு!

அதுவே தரும்
அவளுக்கு முழு சுதந்திரம்