சுரேஷ் ராஜகோபால், /”எல்லாமே சுகம்தானே”

விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால 11வது கவியரங்கம்,
நாள் 14 03 2024 கிழமை வியாழன் நேரம் மாலை 05.10 “எல்லாமே சுகம்தானே “
என்ற எனது கவிதையை படிப்பது சுரேஷ் ராஜகோபால், சிட்லபாக்கம், சென்னை.

வான் முட்ட மலை இருக்க
தேன் சொட்ட மலர் சிரிக்க
எல்லாமே சுகம்தானே
நன்றாக நாமிருந்தால். 1
வண்ணமாக வானிருக்க, அதன் நடுவே
வடிவத்தில் மலைத் தானிருக்க
எல்லாமே நலம்தானே
சுகமாக நாமிருந்தால் . 2

சொல்லாமல் விளங்கிடும்
சுவைக்காமல் இனித்திடும்
எல்லாமே சுகம்தானே
நன்றாக நாமிருந்தால். 3

சிட்லபாக்கம்,
14 03 2024 மாலை 05.10