
மனிதர்கள்
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவிதம்
யாரும் தங்களை
உற்றுப் பார்ப்பதில்லை
எப்படி என்று
கேள்வி கேட்பதில்லை
நடக்கும்போதும்
சரி,
மற்றவர்களுடன்
பேசும்போதும்
சரி,
ஏன் இப்படி
நடந்து கொள்கிறோமென்று
அவர்களுக்கே தெரிவதில்லை
மற்றவர்கள்தான்
புரிய வைப்பார்கள்
புரிய வைக்கும்போதுதான்
மனிதர்களுக்குத்
தெரிய
வரலாம். இதுமாதிரி
தவறுகளை செய்திருக்கிறோமா
என்று
ஆனால்
அவற்றை ஆராயாமல்
அப்படியே
ஏற்றுக்கொண்டு விடுவார்கள்
இயல்பாக
பழையபடி அவர்களுடைய
பிடிவாத
குணங்களைத் தொடர்வார்கள்
நானும் நீங்களும்
மனிதர்கள்தான்
