நாகேந்திர பாரதி/மக்கள் என் பக்கம்

(இன்றைய சொல்புதிது ஜூம் அரங்கில் வாசித்த கவிதை )

தேம்பிக் கிடக்கும் போது
தேறுதல் சொல்லாதோர்

தேர்தல் வந்தவுடன்
தெருவுக்கு வருகின்றார்

ஓட்டுப் போடச் சொல்லி
உளறித் திரிகின்றார்

நோட்டுப் பணத்தை எல்லாம்
உருவி இறைக்கின்றார்

வாக்கைக் கொடுத்தவர்க்கு
வாக்குத் தவறி விட்டு

விட்ட பணத்தை எல்லாம்
விரைந்து எடுப்பதற்கு

ஆட்சிக்கு வந்தவுடன்
அலைந்திடுவார் வெளிநாட்டில்

‘மக்கள் என் பக்கம் ‘
சுவரொட்டி மட்டுமே

மாடு தின்பதற்கு
மிச்சம் உள்நாட்டில்