ந.பானுமதியின் மூன்று கவிதைகள்

காஞ்சி மகா சுவாமிகளின் கனகாபிஷேகம் போது என் அம்மா சொன்னதற்கு இணங்க

நான் எழுதிய பாடல்.


  1. காஞ்சி நகர் தனில் வாழும்
    அந்தக் காமாட்சி அம்மனின் புதல்வன்
    அவன் வேத விலாசத்தில் உறைவான்
    நம்ம வேதனையில் பங்கு பெறுவான்
    அவன் சிரசில் மலர் கிரீடம்
    பசும் பொன்னால் அபிஷேகம்
    காணும் காட்சி நம் பேru
    நானிலத்தில் இணை யாரு?

முல்லை மலர்ச்சரம் எடுத்து
மல்லிகை ரோஜா பொ தித்து
அவன் பாதத்திலே அதை பணித்து
சொல் மாலையினால் துதித்து
அவர் வருவார் நலம் தருவார்
குரு உருவாய் திருவருளாய்

இந்தக் கவிதையை சிந்து மெட்டில் பாடலாம்.

2.
சிறிது குனிந்து
சரேலென நிமிர்ந்து
சரிந்து துடிக்கும் பாதத்தில்
சிறிய இடைவெளி விட்டு
முற்றும் புள்ளியாய்
ஒரு கேள்விக்குறி
அது என்ன சொல்ல வருகிறது
கேள்விக்கும் முழுமைக்கும் இடையே
மௌனம் என்ற இடைவெளி அவசியமென்றா?

3.
அந்தக் காகக் குஞ்சிற்கு
காலில் சிறிது கீறல்
மதிலில் இளைப்பாற அமர்ந்த போது
பஞ்சடி வைத்து வந்த பூனை
பாவம், அது குருட்டுப் பூனை என
நோவுடன் பறந்த காகத்திற்கு தெரியாது
அதற்கு நோய் என பூனைக்கும்.

2 Comments on “ந.பானுமதியின் மூன்று கவிதைகள்”

  1. ஒரு கேள்விக் குறியின் வடிவமே கவிதையாக நிற்பது அருமை. கேள்விக்கும் பதிலுக்கும் இடையே எனச் சொல்லாமல் முழுமைக்கும் இடையே எனச் சொன்னது அபாரம். படித்து மீண்டும் படிக்கத் தூண்டும் கவிதை.

  2. Arumai!
    Question mark poem excellent .

    காகம் , குருட்டுப். பூனை அற்புதம் !
    இயற்கை நிகழ்வு !
    நாம் நிறைய பேரை இப்படித்தான் தப்பா புரிஞ்சுக்கறோம் !

Comments are closed.