மதுவந்தி கவிதைகள்

இன்று 16.03.24 விருட்சம் மெய்நிகர் கவியரங்கில் நான் வாசித்த எனது கவிதை கீழே.

  1. ஒத்தைச் செருப்பு.

ஈன்ற பொழுதின்
பெரிதுவக்கும் மகன்
பச்சை அட்டை நீடிக்க
காலம் குறைவென
விரைவாய்க் கிளம்பிப்
போயாச்சு.

மணலாய்ப் பரவிக்
கிடந்தாலும்
ஆழமாய்த் தோண்டினால்
நீர் சுரக்கிற நதி ஊற்றென,
அடைத்தேயிருக்கும் கதவுகள்
திறந்து கை கொடுத்த
அக்கம்பக்க பந்தங்களும்
போயாச்சு.

நீரை விடக் கனமானது
உதிரமென உணர்த்திய
உடனிருந்து உதவிய
உறவுகளும் போயாச்சு.

நான்வேறு நீவேறில்லையென
கூடவே இருந்து தாங்கிய
உயிர் நட்புகளும்
பிரிய மனமின்றி
பிரிந்து போயாச்சு.

அவரவர் பாதை
அவரவர் பயணம்
அவரவர் உலகமென
எல்லோரும் போயாச்சு .
உடனிருந்து கூடவே வந்த
ஒரு ஜோடிச் செருப்பில்
ஒரு செருப்பு இல்லாமல்
போனதும்,
தனித்துக் கிடக்கிற
ஒத்தைச் செருப்பென
இனி, காத்திருப்பு தனியாக.
( மதுவந்தி. பூபாளம் கீதம் 29 பிப்ரவரி24 இல் வெளியானது.மீள் பதிவு.).

  1. மெளனம்.

குறை குடம்
கூத்தாடும்.

நிறை குடம்
அர்த்தம் பொதிந்த
மெளனம் தாங்கி
அவதானித்திருக்கும்.

One Comment on “மதுவந்தி கவிதைகள்”

Comments are closed.