யாசகன்

எஸ் வி வேணுகோபாலன்

என் பாத்திரத்தில்
அவன்
கேட்டுக் கொண்டிருந்தான் யாசகம்

எல்லா இடங்களிலும்
எப்படி தாழ்ந்து
எப்படி மண்டியிட்டு
எப்படி கெஞ்சி
எப்படி மன்றாடி
எப்படி உருக வைத்து
எப்படி சலனப் படுத்தி
எப்படி இரங்கி
எப்படி என்னை
முற்றாகத் தொலைத்து
ஏதோ பெறுவதற்கு
ஏந்தி அலைகிறேனோ

அந்தப் பாத்திரத்தில்
அல்லது
என் பாத்திரத்தில்
அவன் இருப்பதைப்
பார்த்து விட்டேன்

அடக்க மாட்டாத
என் சிரிப்பொலி கேட்டு
அசைந்து கொடுத்து
நிமிர்ந்து பார்த்த அவன்
சட்டென்று எழுந்து புறப்பட்டுப் போனான்
இடத்தை
எனக்கே எனக்கு வழங்கிவிட்டு.

நன்றி : அஷ்ரஃப் பேகம்.

4 Comments on “யாசகன்”

  1. வெள்ளத்திலும் விலகாத விரல்கள் பிடித்த பேனா. கொட்டுகிறது கவிதை மழையாக. ஓவியம் வடிவெடுத்தது வார்த்தைகளாக!

  2. எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்ற உயர்ந்த சிந்தனை ஊறும் மனித நேய கவிதை. வாழ்க தோழர்.

Comments are closed.