ஶ்ரீதர்

தாயின் குரல் கேட்கா
சேய் போல்
கண்ணவன் விரல் தொடா
மங்கை போல்
கருத்து அழுது கிடந்தன
மேகங்கள்!
மடி கிடைத்த மகவாய்
மதுவுண்ட மலராய்
அவன் இதழுண்டு
கண் சிரித்த அவளாய்
கதிர் விரித்து
வான் சிரிக்குது அழகாய்!
ஶ்ரீதர்

தாயின் குரல் கேட்கா
சேய் போல்
கண்ணவன் விரல் தொடா
மங்கை போல்
கருத்து அழுது கிடந்தன
மேகங்கள்!
மடி கிடைத்த மகவாய்
மதுவுண்ட மலராய்
அவன் இதழுண்டு
கண் சிரித்த அவளாய்
கதிர் விரித்து
வான் சிரிக்குது அழகாய்!