கருணை முகம்

நாகேந்திர பாரதி


தோளில் தூக்கிக் கொண்டு போய், பக்கத்து ஊர் மார்க்கெட்டில்சீனிச்சேவு வாங்கிக் கொடுத்த அந்த அன்புக் கைகள் தொங்கிப்போய் கிடந்தன . ஏறி இறங்கும் மார்பு மூச்சு இருப்பதைக் காட்டுகிறது. மற்றபடி எந்த அசைவும் இல்லை. கோமாவில் ஐந்துவருடங்களாகப் படுக்கையில் கிடக்கும் அப்பாவைபார்க்கும்போதெல்லாம் அழுகையை அடக்க முடிவதில்லை நளினியால்.

தினசரி ஆஸ்பத்திரி வந்து அந்த வற்றிப் போன உடம்பை ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டே அவள்வழக்கமாகிவிட்டது. ‘இது என்ன கொடுமை வாழ்வும் இல்லாமல்இறப்பும் இல்லாமல். அவரை நான் வந்து பார்ப்பது அவருக்குதெரியுமா. என் அழுகையைப் பார்த்து அவருக்கு ஒரு ஆறுதல்கிடைக்குமா ‘ அவளது நினைவு பின்னோக்கி ஓடியது. அவளதுகுழந்தைப் பருவம் தொடங்கி இப்போது வரை அவருடன்இணைந்து இருந்த வாழ்வை அசைபோடும் நேரம்.

விதவிதமான தின்பண்டங்கள், முதன் முதல் அவர் மூலம் தான்தெரிந்து கொண்டாள் . முதன்முதலில் மதுரை சென்ற ரயில்பிரயாணம். ஒவ்வொரு ஸ்டேஷன் வந்தவுடன் இறங்கி அந்தந்தஊர் தின்பண்டம் வாங்கி வந்து கொடுத்தது. காராச்சேவு, கடலைமிட்டாய், எள்ளுருண்டை என்று எத்தனை .அவரோடு சேர்ந்துநடப்பது ஒரு ஓட்டம் போல்தான். என்ன உயரம் அவர். இருகைகளும் கால்களும் ‘ திண் திண் ‘ என்று.

அம்மா இறந்த போது தான் அவர் அழுது பார்த்தாள் அதற்குப்பின்அவள் மேல் அவர் பொழிந்த பிரியம் அதிகம். ‘அம்மா மாதிரி நான்இருப்பதை எவ்வளவு பெருமையாகச் சொல்லிக் கொள்வார்’. தாயாகவும் இருந்து பார்த்துக் கொண்டார் .தலை பின்னியது என்ன, தோசை வார்த்துக்கொடுத்தது என்ன, பள்ளிக்கூடப் பையைத் தூக்கி வந்தது என்ன.

முதன் முதல் பார்த்த சினிமா அவரோடுதான். அந்தப் பெரியதிரையில் சண்டைக்காட்சி வந்த போதெல்லாம் அவர் கைகளைக்கட்டிக் கொண்டது நினைவுக்கு வந்து. பெரிய பெண்ணான அன்றுபயந்து கொண்டு அவரிடம் சொன்னது. அவர் அவளைத் தூக்கிக்கொண்டு லேடி டாக்டரிடம் ஓடியது. அந்தக் தோள்களில் இருந்துகைகள் உயிரோட்டமே இல்லாதது போல் தொங்கிக் கிடந்தனபடுக்கை மேல்..

பள்ளி முடித்து கல்லூரி அட்மிசனுக்கு அலைந்தது. ஹாஸ்டலில்சேர்த்து விட்டது. பார்க்க வரும்போது எல்லாம் , அந்த மஞ்சள்பையில் இருந்து எடுத்துக் கொடுக்கும் சுருண்டு மடங்கிக்கிடக்கும் விவசாய ரூபாய்களை விரித்து எண்ணிக் கொடுத்தது. வேலைக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்கு வயலை விற்றது. வேலையில்சேர்ந்த பின்பு கூட வந்து இருந்து பார்த்துக்கொண்ட வீட்டுவேலைகள்.

கல்யாணத் தரகரிடம் மணமகனுக்கு சொல்லி வைத்திருந்து போய்வந்து கொண்டு இருந்தவர் ஒரு நாள் நினைவு இழந்து விழுந்தது. அன்று கொண்டு வந்த சேர்த்த ஆஸ்பத்திரிதான் . ஐந்து வருடங்கள்ஓடி விட்டன. வித விதமான வார்த்தைகளில் சொன்ன வியாதியின்விளக்கம் அவளுக்குப் புரியவில்லை. ஆனால், அவர் இப்படித்தான்இனிமேல் என்பது மட்டும் புரிந்தது. அவர் தாடி முகத்தில், ஒளிந்துகிடக்கும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியாமல் அழ மட்டும்தான் முடிந்தது அவளால். கண்களில் வழிந்த கண்ணீரைக்கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள் .

‘கொஞ்சம் வெளியே போய் இருக்கீங்களா மேடம், கிளீன்பண்ணணும் ‘ . நர்சைக் கும்பிடுகிறாள் நளினி.’நான் பண்ணவேண்டியதை நீங்க பண்றீங்க. நீங்க நல்லா இருக்கணும்’. ‘இதுஎங்க கடமை மேடம்,’ அரை மணி நேரம் கழிந்தது. ‘நீங்க உள்ளேபோகலாம் மேடம் ‘ .வேறு பெட்ஷீட் , வேறு வேட்டி , வேறுபோர்வை ‘முகத்தில் லேசாக வளர்ந்திருந்த தாடி மழிக்கப்பட்டு இருந்தது .

புத்தம் புதிதாக மலர்ந்த பூ போல இருந்தார் அப்பா .லேசாகசிரித்த கருணை முகம். ‘இந்தாங்க மேடம் டாக்டர் கொடுத்தார் ‘ என்றபடி கொடுத்த கருணைக்கொலை அப்ளிகேஷன் பாரம்கண்ணீரில் நனைய ‘வேண்டாம்’ என்று திருப்பிக் கொடுத்தாள்நளினி.