நாகேந்திர பாரதி/கனாக் கண்டேன்

அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 13- 17/3/2

ஆகாயத்தில் இருந்து
இறங்கிய நட்சத்திரம்

அழுது கொண்டிருந்த
குழந்தை கையில்

தன்னை ஒப்படைத்துச்
சிரிக்க வைத்த காட்சி

கனவுக்குப் பொருளிருந்தால்
அவரவர் அர்த்தத்தில்

புரிந்து கொள்ளலாம்
புரியாமலும் போகலாம்