சுரேஷ் ராஜகோபால்/”தண்ணீர் கண்ணீர்”

தண்ணீருக்கு நித்தம்
யுத்தம் செய்யும் நாம். 1

கண்ணீர் விடும் காலமிது
தந்தை செய் குற்றங்கள்
சந்ததியைத் தாக்குமாம் இங்கே
நம்மவர் செய்தவை
நம்மையே தாக்குதே இறைவா
இறைஞ்சியும் மனமில்லையா உனக்கு. 2

நாங்கள் கொடூரமாகக்
காட்டை அழித்தோம்
மரங்களைச் சாய்த்தோம்
நீர்வளம் மாய்த்தோம்
ஊர்வன பறப்பன நடப்பன என்று
என்று எதையும் விட்டு
வைக்காமல் அழித்தோம் . 3

இந்நிலை தொடர்ந்தால்
தண்ணீர் கிடைக்காது
கண்ணிலே செந்நீர் மட்டும் வந்திடுமே. 4