வளவ. துரையன்/அடிதான்……

ஒரே ஒரு அடிதான்
மாவலியை அன்று
அதல பாதாளத்தில் அழுத்தியது.

ஒரே ஒரு அடிதான்
எல்லார் முதுகிலும் பட்டுத் தெறித்தது.

ஒரே ஒரு அடிதான் வண்டி மாட்டை
அப்பக்கம் திருப்பியது.

ஒரே ஒரு அடிதான்
கட்டையை இரண்டாகப் பிளந்து காட்டியது.

ஒரே ஒரு அடிதான்
இன்று
அடித்த ஆசிரியரை
வீட்டிற்கு அனுப்பியது