அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 69

30..03.2024

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம். 
ஜெகன் : ஆராச்சாரைப் படித்தீர்களா?
அழகியசிங்கர் :  நாளை குறைந்தபட்சம் பத்து பக்கங்களாவது படிக்க நிளைத்தேன். ஆனால் 3 பக்கங்கள் படித்து விட்டேன்.
மோகினி : இப்போதைக்கு இந்த நாவலை முடிக்க முடியாது. 
அழகியசிங்கர் :  ஆமாம். அதுமாதிரி நிறைய நாவல்களை ஆரம்பித்து பாதியில் படிக்க முடியாமல் நிறுத்தியிருக்கிறேன்.
மோகினி :  பி.சத்யவதி சிறுகதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
அழகியசிங்கர் :  ஆண் வர்க்கத்தின் மீது பி.சத்யவதிக்குக் கோபம் இருக்கம்போல் தோன்றுகிறது. அவருடைய கோபம் அவர் கதைகளில் தெரிகிறது. பெண்கள் என்றால் குடும்பத்திற்காக எல்லாம் தியாகம் செய்திருப்பதுபோல் எழுதியிருக்கிறார்.  ஆண்களை எதிர்த்து நின்று வெற்றி பெறுகிற மாதிரி சில கதைகள் வந்திருக்கின்றன.
மோகினி : இன்றைய சூழ்நிலையில் அவர் கதைகளை ஏற்றுக்கொள்வார்களா?
அழகியசிங்கர் :. இன்றைய சூழல் வேறு மாதிரி. சத்யவதி கதையில் இருப்பதுபோல் ஒரு கதாபாத்திரம் இருந்தால், போடா என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார்கள்..
ஜெகன் :  இணையக் காலக் கவிதைகள் புத்தகம் ஒன்றைத் தயாரித்து விட்டீர்கள் போலிருக்கிறது. 
அழகியசிங்கர் :  அந்தப் புத்தகத்தில் இன்னும் செப்பம் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. 
மோகினி :  எல்லோரையும் பேச்சு மூலம் பதிவு செய்துவிட்டு கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டு வருகிறீர்கள்.
அழகியசிங்கர் :தொடர்ந்து இன்னொன்றும் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.
மோகினி :  வாழ்த்துகள். வாசிக்கிற கவிதையின் தரம் எப்படி  இருக்கிறது.
அழகியசிங்கர் : தரம் என்பது தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தது. கவிதையில் தரம் என்பது பார்க்கிற பார்வையைப் பொறுத்தது. 
மோகினி : பெரும்பாலோர் கவிதையைப் படிப்பதில்லை. அப்படிப் படிப்பவர்கள் உயர்வான அபிப்பிராயம் சொல்வதில்லை.
ஜெகன்: இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம். 
                                                              (காலை 7.25 மணி)