ஒற்றுமையே உயர்வு/பி. ஆர்.கிரிஜா

ஒரு காலத்தில் மரங்கள் அடர்ந்த அந்தத் தெருவில் எண்ணி அங்கும் இங்குமாக நாலே வீடுகள் தான் இருக்கும். திடீரென்று அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டி ஒரு ஷெட் போட்டு புதிதாக ஒரு ஃபேக்டரி ஆரம்பித்தார்கள். ஒரு விதத்தில் அது நல்லதாகவே பட்டது அந்த கிராமத்து மக்களுக்கு. அந்த குடியிருப்பில் உள்ள முக்கால் வாசி பேருக்கு வேலை கிடைத்ததில் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டது.
அந்த கிராமத்தை சேர்ந்த ராமுவும், சோமுவும் இணை பிரியாத நண்பர்கள். அவர்களுக்கும் அந்த பிளாஸ்டிக் பொம்மை தயாரிக்கும் ஃபாக்டரியில் வேலை கிடைத்ததில் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்
நாட்கள் உருண்டோடின. இருந்த ஒன்றிரண்டு மரங்களும் காய்ந்து போய் விட்டது. மழையும் பொய்த்துப் போனதால் நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே வந்தது. அந்த ஃபாக்டரியிலிருந்து வெளியேறும் சாயக் கழிவுகளும் குடிநீரில் கலந்து மக்கள் உடல் நலம் பாதிக்க ஆரம்பித்தது.
அப்போதுதான் ராமுவும், சோமுவும் ஒரு முடிவெடுத்தார்கள், எப்படியாவது அந்த கிராமத்தின் பழைய நிலைமையை திரும்பிக் கொண்டு வர வேண்டும் என்று.
அவர்கள் முதலாளியிடம் பேசி ஊர் மக்களை ஒன்று திரட்டி மரம் நடுவதற்கு ஏற்பாடு செய்தனர். மேலும் இயற்கை மூலிகைகள். பச்சிலைகள் கொண்டு
பொம்மைகளுக்கு சாயம் பூச வழி கண்டு பிடித்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தவும் ஆரம்பித்தனர்.
ஊர்மக்கள் அனைவரும் அவர்களுக்கு உறு துணையாக இருந்ததால் எல்லாம் சாத்தியம் ஆனது.
இதோ, இப்போது ராமுவும், சோமுவும்
சுற்றுப் புறத்தைக் காத்து பசுமையை மீட்டெடுத்ததற்கு அந்த கிராமத்தின்
சர்பஞ்சுவிடமிருந்து விருதுகள் வாங்கப் போகிறார்கள். அந்த கிராம மக்கள் அனைவரும்
மகிழ்ச்சியோடு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தனர். அவர்கள் கண்களுக்கு இன்று அந்த மரமும், ஃபேக்டரியும்
பசுமையாக காட்சி அளித்தது.


30/03/2024

One Comment on “ஒற்றுமையே உயர்வு/பி. ஆர்.கிரிஜா”

Comments are closed.