கோ யுன்/வீடு


—-

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

—-
வீட்டின் உள்ப்பகுதியிலிருந்து
சடைநாயின் வால் வெளியில் வந்தது, வரவேற்பதாய்.
வீட்டின் உள்ப்பகுதியிலிருந்து
எனது இதயம் வெளியே வந்தது, பெரு மகிழ்ச்சியுடன், வரவேற்பதாய்.

நான் என் ஹெல்மெட்டைக் கழற்றினேன்
என் துப்பாக்கியைக் கழற்றி கீழே வைத்தேன்.
துப்பாக்கி ரவைகளுக்கான பட்டியைக் கழற்றினேன்.

எந்து தோல் பூட்ஸுக்களைக் கழற்றினேன்.
எனது காலுறைகளை அகற்றினேன், முதலில் இடது காலுறை.
எனது வெற்று பாதங்கள் வெளிவந்தன
இரக்கத்திற்குரியனவாய்,
அடித்துத் துவைக்கப்பட்ட
புத்தம் புதிய தளிர்களைப் போல.

நான் என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்தேன்
அழ ஆரம்பித்தேன்.