காற்றினிலே வரும் கீதம்/சசிகலா விஸ்வநாதன்

இன்றைய அழகிய சிங்கரின் என்பா
🪷
காலையில்
நடைப்பயிற்சி; ஏறி இறங்கும்

மலைப்பாதை; அமைதியின் இனிமையில்
மனம்:

மழைச் சாரலின் சர சரப்பு;

காற்றினிலே வரும் கீதம்
🪷
பாய்ஸி ஆற்றின் இதமான சலசலப்பு;

வண்ண வண்ண புள்களின் கலகலப்பு

ஊர்ந்து போகும் சர்ப்பத்தின் சரசரப்பு;

காற்றினிலே வரும் கீதம்
🪷
குளிர் காலையில்
என் காஃபி

பில்டரின் சொட் சொட் என

டிகாஷன் இறங்கும் இசை அது;

காற்றினிலே வரும் கீதம்
🪷
அழகன் மேனாவில்
மலை இறங்கி

வருமழகு;மேனி சிலிர்க்க; மக்கள்

கோவிந்தா! கோவிந்தா! எனும் கூவல்;

காற்றினிலே வரும் கீதம் .
🪷
தலை சுற்ற,எவரோ என்னைத்

தாங்க; இன்னது எனப் புரியாமல்

மயங்க; “அம்மா” என்னும் குரல்

காற்றினிலே வரும் கீதம்
🪷