காற்றினிலே வரும் கீதம்/பி. ஆர்.கிரிஜா

அழகிய சிங்கரின் என்பா !

காலை வெயில் இதமாய்ப் பரவ
காகங்கள் கூட்டமாய் பறந்து செல்ல
வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட
காற்றினிலே வரும் கீதம்

பள்ளிக்குச் செல்ல தயாராகும் சிறார்கள்
சமையலறை வாசனையில் மயங்கும் மனம்
தோட்டத்தில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள்
காற்றினிலே வரும் கீதம்

கடல் காற்றின் இதமான வருடல்
பசியில் சிணுங்கும் மழலையின் சத்தம்
கோவில் மணியின் இனிய ஓசை
காற்றினிலே வரும் கீதம்


05/04/2024