அனங்கன்/நூற்கள் சிலுவையாவதில்லை…..

எண்சீர் கழிநெடிலடி மண்டிலம்.(காய்+காய்+காய்+மா)
்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்
புரட்டியதைப் பார்க்கின்றேன்
புரியவில்லை வாழ்க்கை…
புரிந்துகொள்ளப் போராடி நிழலானேன் இருளில்.

புரட்டைமட்டும் கொள்கையென்று கொள்ளுகின்ற உலகில்…
புலவனாக என்னசெய்வேன்
யான்கையறு நிலையில்.

புரட்டுகின்ற புத்தகங்கள் மனிதனாக்க வில்லை….
புத்தகத்தைப் படைத்தவனும்
புனிதனாக இல்லை.

திரட்டிவைத்த தத்துவங்கள்
பயனளிக்க வில்லை….
திரும்பவந்து வாழ்வதற்கு
காலம்நிற் பதில்லை.

கற்றவித்தை வாழ்க்கையிலே
கரைசேர்க்க வில்லை…
கற்றவர்க்கும் கற்றபின்பும் கீழ்மைபோக வில்லை.

விற்பதற்கு கல்வியொன்றும்
கடைச்சரக்கு இல்லை….
விற்றகல்வி பொய்மையென்றால் விடியப்போ வதில்லை.

சொற்களைத்தான் அடுக்கிவைத்தால் கவிதையாவ தில்லை….
சொல்லம்பு பழுதென்றால்
இலக்கடைவ தில்லை.

மற்றவைகள் எப்படியோ
நூற்சிலுவை யில்லை….
மாற்றநீயும் இயேசானால்
தடுக்கப்போ வதில்லை.