சசிகலா விஸ்வநாதன்/முகமூடி


இனிய மாலை வணக்கம்
இணைய கால கவியரங்கம்
சனிக்கிழமை
கவிதையின் தலைப்பு

நாளும் ஒரு முகமூடி
நான் அணிகிறேன்; உண்மை!

மெய்யாகத்தான் இதை சொல்கிறேன்;

முகமூடி எதுவும் இல்லாமல்…

நான்;நானாக நானிலத்தில் இருக்கலாகுமோ?

ஓரு ஆங்கில பழமொழி போல்
ஆளுக்கு ஒரு நீதி;

அதுமட்டும் போதாது;
நேரத்திற்கு நேரம் அதுவும் மாறும்;

எதையும் சிறிது கூட்டி,
சிறிது குறைத்து,

சரிவிகிதத்தில் பரிமாறியாக வேண்டும்

சரியான நேரத்தில்,
சரியான மனிதரோடு பகிர்தலை,

நீங்கள்,முகமூடி என்றே கொண்டாலும்…

அதுதான் வாய்மையே.

அது தேவைதான் வாழ்விற்கு..

நானுமே முகமூடியுடன் உலா வருகிறேன்..

என் தோள்பை நிரம்பி வழிகிறது;
முகமூடிகளினால்.

இதோ; இது உங்களுக்கானது.
மகிழ்வுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.


30-3-2024