தஞ்சாவூர் ஹரணி/சிலவற்றை

நவீன விருட்சம் – திரு அழகிய சிங்கர் நடத்தும்
இணையக் காலக் கவியரங்கம் 30 – 8.4.2024
000

சிலவற்றை தவிர்த்தும் சிலவற்றை தவிர்க்காமலும்
சிலவற்றை மறந்தும் சிலவற்றை மறக்காமலும்
சிலவற்றை நினைத்தும் சிலவற்றை நினைக்காமலும்
சிலவற்றை வெறுத்தும் சிலவற்றை வெறுக்காமலும்
சிலவற்றை விரும்பியும் சிலவற்றை விரும்பாமலும்
சிலவற்றிற்குப் பயந்தும் சிலவற்றிற்குப் பயப்படாமலும்
சிலவற்றுக்குக் கட்டுப்பட்டும் சிலவற்றுக்குக் கட்டுப்படாமலும்
சிலவற்றைச் செய்தும் சிலவற்றைச் செய்யாமலும்
சிலவற்றை மதித்தும் சிலவற்றை மதிக்காமலும்
ஒவ்வொரு தருணத்திலும்
ஒவ்வொரு பொழுதிலும்
ஒவ்வொரு நாளிலும்
வாழ்வெனவே…