காப்பி/அழகியசிங்கர்

காப்பி குடிப்பதைப்
பற்றி நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்

தினமும்
உங்கள் மனைவி
காப்பி கொடுப்பதற்கு
அலுத்துக்
கொள்கிறாள்
உங்கள் மனைவியை
ஏமாற்றி

இரண்டு மூன்று தம்ளர்கள்
காப்பி குடித்து விடுகிறீர்கள்

இதையும்
தவிர மனோஜ் பவன்
போய்
உங்கள் நண்பருடன்
காப்பி
குடித்து விடுகிறீர்கள்

இப்படிக்
குடிப்பது உடலுக்குக்
கெடுதல் என்று யாரும்
சொல்லவில்லையா?

இரவு
எப்போது எழுப்பினாலும்
காப்பி கலந்து
கொடுத்தால் குடித்து
விடுகிறீர்கள்

காப்பியில் விஷம்
இருக்கிறதென்று
யாரோ
சொல்ல்யிருக்கிறார்கள்
அது
உண்மையாக கூட
இருக்கலாம்

எதா இருந்தால் என்ன
காப்பிக் குடிக்கிற பழக்கம்
பழக்கம் விடமுடியவில்லை