டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் -202

தேவாரம் – அவன் பாதம் சேர்

அவருக்கு வயதாகி விட்டது. நிற்க முடியவில்லை. மகள் மடியில் தலை வைத்து படுத்து இருக்கிறார். இன்னொரு மகளிடம் “பசிக்குது…கொஞ்சம் கஞ்சி கொண்டு வா ” என்று கேட்கிறார். அவர்கள் கண்ணில் எல்லாம் கண்ணீர். எப்படி இருந்த அப்பா இப்ப இப்படி ஆகி விட்டாரே என்று வருந்துகிறார்கள்.
ஆனால்..நமக்கும் அப்படி ஒரு காலம் வரும் முன்னே திரு துருத்தி என்ற ஊரில் உள்ள சிவனின் பாதம் சேர் என்கிறார் திருநாவுக்கரசர்….

பாடல்

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.

பொருள்-

வஞ்சிக் கொடி போன்ற சிறிய இடையைக் கொண்ட,வாள் போண்ற நீண்ட கண்கள் கண்ணீர்
சிந்த,தலைமுடி மடியின் மேல் வைத்து.படுத்து,கஞ்சி அருந்த, ஒருத்தி கொண்டு
வா என்று சொல்வதற்கு முன்..என் மனஏ திருத்துரித்தி என்ற ஊரில் உள்ளவனின்
(சிவனின்) பாதம் சேர்

                    -