சசிகலா விஸ்வநாதன்/பாய்ஸி காட்டும் காட்சி-2

சூரியப் பந்து மெல்ல மெல்ல
இறங்கி;மேற்கு மலையில் நித்திரை
கொள்ள; அதே நொடியில் சந்திரத்
தட்டு கீழ் மலை சிகரத்தில்
காணும், அதிசய அற்புதம்; இன்று
நான் கண்டேன்!

வெண் பஞ்சில்
செய்து வைத்த
பொம்மை மலைகள்…
நீரொழுகும் கற்பக
சுனைகளாய்;

நடைபாதை எங்கும்
குளிர் தேன் துளி சாரல்.
இன்று நான் கண்டேன்.

பச்சை மலை மேல்
நீல மலைத்தொடர்கள்.

நீல மலை தொடர்களுக்கு,;
வெண் கொற்றக் குடைகளாய்
பனிச் சிகரங்கள்…

இன்று நான் கண்டேன்