அழகியசிங்கர்/மிருகம்

இப்போதெல்லாம்
மிருகங்கள்
நம்முடன் சேர்ந்து
பழகுகின்றன

வேண்டாமென்றாலும்
விடுவதாயில்லை
ஒரு வெள்ளை நிறப் பூனை
என் பேத்தியைத்
துரத்துத் துரத்துத்
துரத்தியது
அதனால் சீக்கிரமாய்
அமெரிக்கா
போய்விட்டாள் பேத்தி

ஒன்றே ஒன்றுதான்
மிருகங்களிடம்
பிடிப்பதில்லை

என் வீட்டு
கார் ஷெட்டில்
பாத்ரூம் போவதுதான்
அந்த மூட ஜென்மங்களுக்கு வேலை
எப்படி மரியாதைத்
தருவது

இடத்தை நாசப் படுத்துகின்றன

அவற்றைப்
பார்த்தவுடன்
நான் கத்திக்கொண்டு
துரத்துகிறேன்
புலிபோல் பாய்கிறேன்

அவை
தலையில் அடித்துக்கொண்டு
சொல்கின்றன
மிருகம் மிருகம் என்று..