கடலூர் ந.பாஸ்கரன்/ வெளிச்சம்

இரவின் சிரிப்பு.
பகலின் மச்சம்.
பகலை இரவாக்கும் பலம் உள்ளது.
இரவையும் காதலாகி அரவணைப்பது.
கல்வி –
கைகட்டி வாய்ப்பொத்தி
கண்ணுக்குக் கற்றுக்கொடுக்கும்.
அனுபவச் சொற்களைக் காதுகளுக்குள் ஊற்றுவது.
கண்ணுள்ள சிலரையும்
இடித்துவிட்டுத் தடுக்கி விடுவது.
கையில் –
கோலென்ற கண்முளைத்தவரை
மடியில்வைத்துப் பால்கொடுப்பது.
தேடித்தேடி கால்வலித்துத் தவிப்பவர்கள்
அமரும் மைல்கல்லாக நிற்பது,
தேம்பி அழுகின்ற வாய்ப்புக் குழந்தையை
வாரியணைத்தெடுத்து
தவறவிட்டுத் தேடும் தாயைத்
தேடி நிற்பது.
வெளிச்சம் விலாசம் உள்ளதல்ல
விவரம் உள்ளது.