துவங்காத போட்டி!

எல்.ரகோத்தமன்

                                                    
 
எல்லோர் கையிலும்
ஒரு கையகல
பேசும் பதுமை!
அது விரித்த
செய்திவலைப் பின்னலில்
சிக்கித் தவிக்கிறது
பொன்னான உலகம்!
 
தினம் தினம்
ஒரு நொடியில்
ஒரு சொடுக்கில்
தொடு திரை மீது
சடுதியில் வந்து விழும்
ஓராயிரம் சங்கதிகள்
உன்னையும் என்னையும்
திசையெட்டும் 
இழுத்த இழுப்பில்
உண்மையும் பொய்யும்
தடம் புரண்டு  போக
அறிவுப்பேழையில்
நிரம்பி வழிகிறது
குப்பைகள் !
 
குப்பைகள் அகற்ற
தேவை ஒரு கருவி!
அதை வடிக்கும் நாயகன்
நீயா ? இல்லை  நானா ?
போட்டி இன்னும்
துவங்கவில்லை!


14-11-2021