விஜயலஷ்மி கண்ணன்

இன்று மாலை நான் ஜூமில் வாசித்த கவிதை.

காத்திருப்பு

அவன் வருவான்,வருவான் என
வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து,
அறியாமலே அலுத்து
கண்கள் துயில
அழகி அவள் அலங்காரத்தைக்
கலைத்துக்கொண்டு
ஜன்னல் படியை
மஞ்சம் கொண்டாள்!