ஆர் வத்ஸலா

1.

அது மட்டும்

என் எதிர்பார்ப்புகளை
குறைத்துக் கொண்டே
வந்தேன்
ஒவ்வொன்றாக

முதலில் உனது வரவை
பிறகு
உனது தொலைபேசி அழைப்பை
பிறகு
என் அழைப்பை
நீ ஏற்பதை
பிறகு
எனது குறுஞ்செய்திக்கு
உனது பதிலை
பிறகு
அதை நீ படித்ததற்கான சான்றாக நீலமாகும்
சரி குறிகளை

ஒரு நம்பிக்கையை மட்டும்
விடத் தயாராக இல்லை
நான்
மூச்சு உள்ளவரை

உனக்கு என் மேல் அன்பு இருக்கிறது
இருக்கிறது
இருக்கிறது

2.

போதும்

நீ என்னைத் தாயாக நினைத்தாயா
இல்லையா என்பதைப் பற்றி
கவலைப்படுவதில்லை
நான்
பார்க்கிறேன் உன்னை மகனாக
நான்

இருக்கிறது என்னிடம் பாசம்
இருவருக்கும் சேர்த்து

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன